ராமநகரத்தின் பாறையேற்றம் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதனால் ராமநகரத்தை தேடி எப்போதுமே சாகசப் பிரியர்களின் கூட்டம் அலை மோதும். இந்த இடம் பெங்களூரிலிருந்து ஏறக்குறைய 48 கிலோமீட்டர் தொலைவில், பாறைக் குன்றுகளால் சூழப்பட்டு காட்சியளிக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது.
1960-ஆம் ஆண்டுகளிலிருந்து புகழ் பெற்று விளங்கி வரும் ராமநகரின் பாறையேற்ற இடங்கள், தென் இந்தியாவின் மிகவும் பழமையான பாறையேற்ற பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமதேவரபெட்டா, தென்கிங்கல்பெட்டா, எஸ்.ஆர்.எஸ்.பேட்டா போன்றவை முக்கியமான பாறையேற்ற இடங்கள்.
அதோடு இங்கு சில உயரமான கருங்கற் பாறைக்குன்றுகளும் இருக்கின்றன. ஒரு சில இடங்கள் பழமை காரணமாக வலிமையற்று காணப்படுவதால் அங்கு மட்டும் பாறையேற்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications