‘மேகங்கள் சூழ்ந்த அரண்மனை’ என்ற புகழைப் பெற்றுள்ள இந்த அரண்மனை ரணதம்போர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் வடபகுதியில் இந்த அரண்மனையை பார்க்கலாம். தற்சமயம் இடிபாடடைந்து காணப்பட்டாலும், இந்த அரண்மனை மீதிருந்து கோட்டையின் முழு கம்பீரத்தையும் பார்த்து ரசிக்கலாம்.
84 தூண்களுடன் கட்டப்பட்டுள்ள ஹம்மிர் மன்னரின் சாத்ரி (நினைவு மாடம்) இங்குள்ள மற்றொரு முக்கியமான அம்சமாகும். இந்த இடத்தில்தான் அம்மன்னர் தன் குடிமக்களை சந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications