உறுதியான இந்த ரணதம்போர் கோட்டை 944ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோட்டை சுற்றியுள்ள சமவெளிப்பகுதிகளிலிருந்து 700 கி.மீ உயரத்தில் உள்ளது.
விந்திய பீடபூமி மற்றும் ஆரவல்லி மலைகளுக்கிடையில் அமைந்துள்ள இது 7 கி.மீ சுற்றளவு கொண்ட நிலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுடன் ஒரு மசூதியும் இந்த கோட்டை வளாகத்தில் காணப்படுகிறது.
கோட்டையை சுற்றிலும் அதிகமாக உள்ள நீர்நிலைகள் காரணமாக, ஏராளமான புலம்பெயர் பறவைகளையும், வசிப்பிட பறவைகளையும் இந்த கோட்டை ஸ்தலத்தில் பார்க்கலாம்.
இந்த கோட்டைப் பகுதியிலிருந்து ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவை நன்றாக பார்த்து ரசிக்க முடிவது மற்றொரு விசேஷம். இந்த வரலாற்றுக்கோட்டை 1528ம் ஆண்டுவரை முகலாய வம்சத்தினரின் ஆளுகைக்குள் இருந்துள்ளது.
ன்னர், 17ம் நூற்றாண்டில் முகலாயர்கள் இக்கோட்டையை ஜெய்ப்பூர் மஹாராஜாவுக்கு வழங்கியுள்ளனர்.



Click it and Unblock the Notifications