சவாய் மாதோபூரிலுள்ள இந்த ரணதம்போர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் எனும் பள்ளியானது ‘புலிகள் பாதுகாப்பு திட்டம்’ பற்றிய கல்வியை மக்கள் மத்தியில் பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இங்கு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை சேர்ந்தவர்களாவார்கள். இந்தியாவின் கம்பீர தேசிய விலங்கான புலி பற்றிய ஓவியங்கள் இங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் விற்பனையும் செய்யப்படுகின்றன..
மேலும், இந்த ஓவியப்பள்ளி பலவகை ஓவியப்போட்டிகளையும் கண்காட்சிகளையும் நடத்துகிறது. காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் புலிகள் பாதுகாப்பு குறித்த உணர்விருப்பை பரப்பும் நோக்குடன் இவை நடத்தப்படுகின்றன.
பலவிதமான அரசு சாரா சமூக நிறுவனங்கள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications