Search
  • Follow NativePlanet
Share

ரீபந்தர் - அரசர்களின் துறைமுகம்

9

கோவா தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியான இல்ஹாஸ் மாவட்டத்தில் ரீபந்தர் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தின் பெயரில் உள்ள பந்தர் என்ற சொல்லுக்கு அரசர்களின் துறைமுகம் என்று பொருள்.

இங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மையான தேவாலயங்கள் இன்றும் இந்த நகரத்தின் பாரம்பரிய பெருமைகளுக்கு சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. மேலும் இந்த நகரத்தில் உள்ள கோவா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் உலகப் பிரசித்திபெற்றது.

ரீபந்தர் நகரம் எப்போதும் வணிகமயமாக்கலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நகரம் மற்ற கோவா பகுதிகளுக்கு மாறாக இயற்கை அழகு மிக்கதாக திகழ்கிறது.

இந்த நகரத்தை மாலை வேளைகளில் அருகிலுள்ள பாலங்களில் இருந்து பார்த்து ரசிக்கும் அனுபவம் அப்படியே உங்களை சொக்கவைத்து விடும். மேலும் இந்த நகரம் புகழ்பெற்ற கோவான் மதகுரு ஏண்டோனியோ ஃபிரேன்சிஸ்கோ சேவியர் அல்வேரெஸ் என்பவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது.

ரீபந்தர் நகரம் மாண்டோவி நதியின் கரையில், பனாஜி நகரையும், மாண்டோவியையும் இணைக்கும் நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இந்த நகத்தை அடைவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. அதோடு இந்த நகரம் பெரிய பெரிய பாலங்கள் மூலம் கோவாவின் மற்ற நகரங்களோடு இணைந்திருக்கிறது.

எனவே அந்த நகரங்களிலிருந்து வாடகை கார்கள் மூலம் ரீபந்தர் நகரை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ரீபந்தர் நகரின் கோயில்கள், தேவாலயங்கள் அனைத்தையும் பரிபூரணமாக பார்த்து ரசிப்பதற்கு உங்களிடம் ஒரு பைக் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

ரீபந்தர் சிறப்பு

ரீபந்தர் வானிலை

சிறந்த காலநிலை ரீபந்தர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரீபந்தர்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue