ராமனின் தம்பி லக்ஷ்மணனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் லக்ஷ்மணன் கோவில் ரிஷிகேஷின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். ரிஷிகேஷில் இருந்து 5கிமீ தொலைவில், கங்கையில் வலதுபக்க கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. ராமாயணத்தின் புகழ்பெற்ற காட்சிகள் இக்கோவிலின் சுவர்களின் படங்களாகவும், கல்வெட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நாடோடிக் கதைகளின் படி ஞானம் பெறுவதற்காக லக்ஷ்மணன் இந்த இடத்தில் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. ராமனும், லக்ஷ்மணனும் இமயமலைக்கு செல்லும் வழியில் கங்கை கரையைக் கடக்க மரக்கொப்புகளால் செய்யப்பட்ட பாலத்தை உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது.
அப்பாலம் இப்போது லக்ஷ்மண ஜூலா என வழங்கப்படுகிறது. இக்கோவிலில் இருக்கும் ரிஷிகுண்டத்தில் ராவணன் என்னும் அசுர மன்னனைக் கொன்றபின் ராமனும், லக்ஷ்மணனும் தங்கள் பாவங்கள் தீர குளித்ததாகச் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications