4520மீ உயரத்தில் அமைந்திருக்கும் சன்ஷால் மலைத்தொடர், ரொஹ்ரு நகரத்தை தோட்ரா காவர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கும் அமைப்பாகும்.இந்த மலைத்தொடரில் உள்ள சிகரங்கள் 5200மீ உயரம் வரையிலும் கூட இருக்கும்.
ஸ்லோப் ஸ்கையிங் விளையாட்டிற்கு ஏற்றாவாறு இந்த இடம் இருப்பது சாகச விரும்பிகளிடம் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது.
விளையாட்டுகளுக்கு பெயர் போன இந்த பிராந்தியத்தில் ஸ்கையிங் விடுதி ஒன்றை அமைக்க ஹிமாச்சல பிரதேச அரசு முன்மொழிந்துள்ளது.மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும் இந்த இடம், பிற மாதங்கள் மற்றும் குளிர் காலங்களில் மூடப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications