மனம் மயக்கும் ஆர்கிட்கள், சப்பாத்திக் கள்ளி மனை, மற்றும் படு நேர்த்தியான தோட்டம் ஆகியவற்றோடு பொலிவாகத் தோற்றமளிக்கும் நேரு வன் உத்யான், ரோயிங்கின் மிகப் பிரபலமான சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.
ரோயிங்கிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்கா, தியோபானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களுக்கான மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இது விளங்குகிறது.
இதன் சுற்றுச்சூழல் தவிர்த்து, தியோபாங் நதியின் முழு பரப்பளவையும் இதற்கு அருகில் அமைந்துள்ள, விருந்தினர் மாளிகையாகவும் இயங்கி வருவதான, எஜி-ப்ரீஸ் கோபுரத்திலிருந்து பார்த்து கண்டு களிக்கலாம். இந்த கோபுரத்தோடு, எஜி ஆறு எமி ஆறோடு கலக்கும் இடமும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும்.



Click it and Unblock the Notifications