பக்ரா அணை, சட்லெஜ் நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள பக்ரா-நங்கல் அணையின் ஒரு அங்கமாகும். பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை பக்ரா கிராமத்தின் பெயரில் இருந்தே தனது பெயரைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய அணையாக அறியப்படும் இது, அதன் அபரிமிதமான நீர் மின் சக்தி ஜெனரேட்டர்களின் மூலம் இது அமைந்துள்ள மாவட்டத்துக்கு மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகியவற்றுக்குமான நீர் மின் சக்தி உற்பத்திக்கு பெருமளவில் உதவி புரிந்து வருகிறது.
இப்பகுதியின் மழைக்கால வெள்ளப்பெருக்குகளைக் கட்டுப்படுத்தவும் இந்த அணை உதவுகிறது. அது மட்டுமின்றி, சிறப்பான நீர்ப்பாசன வசதியை நல்கி, இப்பகுதியின் விவசாய உற்பத்தியை உயர்த்தவும் உதவி வருகிறது.
மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரபலமான நீர்த்தேக்கமான கோவிந்த் சாகரை தன்னகத்தே கொண்டுள்ள பெருமையையும் பெற்றுள்ளது இந்த அணைக்கட்டு.
இதன் தனித்துவமான இயற்கை அழகு மற்றும் பச்சை பசேலென்ற சுற்றுப்புறம் ஆகியன நாடெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்த்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.



Click it and Unblock the Notifications