ஸ்ரீஹிந்த் வாய்க்காலின் கரையோரத்தில் அமைந்துள்ள சிறு நகரமான சம்கௌர் சாஹிப்பில் தான் பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் ஜி அவர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையிலான சம்கௌர் போர் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள ஏராளமான குருத்வாராக்களுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். ரூப்நகர் மற்றும் சம்கௌர் சாஹிப்புக்கு இடையிலான 17 கி.மீ. தூரத்தை கடப்பதற்கு சுமார் 20 நிமிடங்கள் வரை பிடிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் ரூப்நகரிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் மூலம் இந்த இடத்தை எளிதாக அடையலாம்.



Click it and Unblock the Notifications