Search
  • Follow NativePlanet
Share

சாகர் தீவு - சொர்கத்தீவு!

6

சமயஞ்சார்ந்த முக்கியத்துவம் உள்ள சொர்க்கத்தீவுக்கு உங்களை அழைத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்? எங்கு பார்த்தாலும் சுற்றிலாப் பயணிகளின் கூட்டம், பரப்பரப்பான விடுமுறை மற்றும் சமயஞ்சார்ந்த ஸ்தலம் - இது தான் கொல்கத்தா கடலோரப் பகுதியில் உள்ள சாகர் தீவு. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இந்த தீவில் பல சுற்றுலா ஈர்ப்புகள் உள்ளன.

அதிக செலவில்லாமல் இங்கே உங்களின் சுற்றுலாவை மகிழ்ச்சியோடு கழிக்கலாம். ஹிந்துக்களின் திருவிழாவான மகர சங்கராந்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகு அல்லது சாலை வழியாக இங்கு வருவார்கள். மேலும் பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வு பெறவும் இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

சாகர் தீவு மற்றும் அதனருகில் இருக்கும் ஈர்ப்புகள்

இந்த இடத்தின் சிறப்பு என்ன? இந்த தீவின் வாழ்க்கை முறையிலிருந்து உணவிலிருந்து படகு சவாரிகள் வரை அனைத்துமே இதன் சிறப்பம்சமாக விளங்குகின்றன.

தங்களின் கார் மூலமாக பயணம் செய்ய விரும்புபவர்களும் இங்கே சுலபமாக செல்லலாம்; படகுகள் மூலம் தங்களின் கார்களையும் இந்த தீவிற்குள் எடுத்துச் செல்லலாம்.

மகர சங்கராந்தியின் போது இங்கு கொண்டாடப்படும் கங்காசாகர் மேளாவை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது. கங்கா நதி, வங்காள விரிகுடாவை சந்திக்கும் இடத்தில் மக்கள் புனித நீராடுவார்கள். சாகர் தீவில் பல விதமான பறவைகளையும் கண்டு களிக்கலாம்.

சாகர் தீவிலுள்ள சாகர் கடல் சார்ந்த பூங்கா மற்றும் கபில் மினி கோவில் ஆகிய இடங்களில் பயணிகள் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம். இங்கே இருக்கும் சாகர் கலங்கரை விளக்கத்திற்கு செல்லவும் சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள்.

இங்கிருந்து தீவின் அழகிய தோற்றத்தை கண்டு களிக்கலாம். கார் இல்லையென்றால் இந்த தீவை சுற்றிப் பார்ப்பது சற்று கடினமாக இருக்கும். உங்களிடம் கார் இல்லையென்றால் ஒரு வாடகை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வாடகை விஷயத்தில் ஏமாந்து விடாதீர்கள்!

சாகர் தீவு சிறப்பு

சாகர் தீவு வானிலை

சிறந்த காலநிலை சாகர் தீவு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சாகர் தீவு

  • சாலை வழியாக
    சாகர் தீவை கொல்கத்தாவிலிருந்து மாநில நெடுஞ்சாலை 34 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 117 வழியாக வந்தடையலாம். இந்த தீவு மாநில தலைநகரத்திலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பக்காளி என்ற இடத்திலிருந்து படகு மூலமாக இங்கே வர வேண்டும். கொல்கத்தாவிலிருந்து நேரடியாக படகு மூலமாகவும் இங்கே வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தாவில் இருக்கும் இரயில் நிலையம் தான் இந்த தீவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சாகர் தீவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun