சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோயில், இப்பகுதியில் உள்ள முக்கிய கோயில்களுள் ஒன்றாகும். சேலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாகவும் இக்கோயில் உள்ளது.
இக்கோயில், 13–ஆம் நூற்றாண்டில், மாமன்னன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. முனிவர் சுகபிரம்ம ரிஷி இக்கோயிலில் வழிபட்டு, தவம் செய்து வந்தார் என்பது சான்றோர் கூற்றாகும்.
இக்கோயில், அருணகிரி நாதர், முருகப்பெருமானை குறித்து ஒரு பாடல் பாடிய காரணத்தினாலும் புகழ்பெற்று விளங்குகிறது. பல்வேறு வரலாற்றுச் சிற்பங்களையும், மூலவரின் திருவுருவச்சிலையையும் இக்கோயிலின் பிரகாரத்தில் காணலாம். சேலத்திற்கு வருகை தரும் யாவரும் இப்பழம்பெரும் கோயிலுக்கு சென்று வருதல் அவசியம்.



Click it and Unblock the Notifications