ஹிராகுட் நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருக்கும் மலைப்பகுதிதான் கேட்டில் தீவு. ஹிராகுட் அணை கட்டப்படுவதற்கு முன்னர் ஒரு வளர்ச்சியடைந்த கிராமமாகவே இந்த தீவு இருந்து வந்தது.
அணை கட்டி முடிக்கப்பட்டவுடன், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு சென்றனர். அவர்கள் இங்கிருந்து சென்ற போது, அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த சில கால்நடைகளை விட்டுச் சென்றனர்.
காலப்போக்கில் அந்த கால்நடைகள் காட்டு விலங்குகளைப் போல வாழத் தொடங்கின. சுற்றே வெண்மை கலந்த கிரீம் நிறத்தில் இந்த தீவில் இவ்விலங்கினங்கள் கட்டுங்கடங்காமல் சுற்றித் திரிய தொடங்கின.
இவை காட்டு விலங்குகளாகவும், வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் அவற்றின் இன விலங்குகளை விடவும் ஆக்ரோஷமானவையாகவும் இருந்தன.இவை மிகவும் வேகமாக செயல்படுபவையாகவும் மற்றும் தங்களுடைய நிலத்தின் காவலர்களாகவும் இருந்தன என்று நம்பப்படுகிறது.
இந்த காட்டு விலங்குகளை பிடிப்பதற்காக மனிதர்கள் செய்த முயற்சிகளுக்கு தகுந்த பலன் இல்லை. இந்த தீவுக்கு வந்து, மிச்சமிருக்கும் கிராமத்தை காணும் போது, இயற்கை ஆக்ரோஷத்துடன் பாதுகாத்து வரும் உணர்வு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications