Search
  • Follow NativePlanet
Share

சியோனி  - புலிகள் மற்றும் மரங்களின் பூமி!

9

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `சத்புரா' பீடபூமியின்  வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள `சியோனி' ஒரு அழகான, அமைதியான சுற்றுலாத் தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம் சுமார் 8,758 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விவசாயமே இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் ஆகும். இந்த மாவட்டத்தில் பாயும் `வைன்கங்கா'  நதி சியோனி மாவட்டம் முழுவதையும் செழிப்புடன் வைத்திருக்கிறது. 

சியோனி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

அது பிற்காலத்தில் `சிவ நக்ரி' அல்லது `சியோனி' என புகழ் பெற்றது. மேலும் இந்த இடம் `ருட்யார்ட் கிப்ளிங்' எழுதிய `ஜங்கிள் புக்' புத்தகத்தில் இடம் பெற்று உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த சியோனி, ஜங்கிள் புக்கில் `சீஒனீ' என குறிப்பிடப்படுகிறது.

சியோனி என்கிற பெயர் சியோனா எனகிற பெயரிலிருந்து மருவியதாக கருதப்படுகிறது. இந்த சியோனா என்கிற பெயர் இங்கு அதிகம் காணப்படும் ஒரு புகழ் பெற்ற மரத்தின் பெயராகும். 

வெர்பேனியல் குடும்பத்தை சேர்ந்த இந்த மரம் இங்கு அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் டொலக் செய்ய பயன்படுகிறது. சியோனா மரத்தை தவிர இங்கு அதிகம் காணப்படும் தேக்கு மரம் பெரிய அளவில் பெஞ்ச் உற்பத்தித்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சியோனி  மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்!

சியோனி சுற்றுலாவில் இங்குள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய மண் அணையான ஆசியா-பீம்கார்க் முக்கிய இடம் வகிக்கிறது. விவசாயத்திற்கு பெரிதும் உதவும் இந்த அணை வைன்கங்கா நதியின் குறுக்கே சப்பாரா என்கிற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள `பென்ச்' புலிகள் சரணாலயம் மற்றொரு முக்கிகயமான சுற்றுலா தலமாகும். இங்குள்ள `பர்கட்' என்கிற சிறிய நகரம் அதன் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகிய சுற்றுப்பகுதிகளுக்காக மிகவும் பிரபலமானது. 

முகாம், மலையேறுதல் மற்றும் பிற வெளிப்புற பொழுதுபோக்குகளில்  ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் பர்கட்டிற்கு சுற்றுலா செல்லலாம். இங்குள்ள மகாகாலேஷ்வர் கோயில், சிவ ஆலயம், மற்றும் அமோடாகார் போன்றவை சிறப்புமிக்க பிற சுற்றுலா இடங்களாகும்.

சியோனி பயணம்!

குளிர் காலங்களில் சியோனிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சியோனி சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம்  மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சியோனி சிறப்பு

சியோனி வானிலை

சிறந்த காலநிலை சியோனி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சியோனி

  • சாலை வழியாக
    சியோனி மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் முக்கிய நகரங்களுடன் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சியோனி செல்வதற்கு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வழக்கமான இடைவெளியில் அருகிலுள்ள இடங்களில் இருந்து கிடைக்கின்றன. டாக்ஸி சேவையை பயன்படுத்தி மத்திய பிரதேசத்தின் பிற இடங்களில் இருந்து சியோனியை எளிதில் அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பயணிகள் நாக்பூரில் இருந்து சியோனிக்கு ரயிலில் செல்லலாம். வழக்கமான ரயில்கள் நாட்டின் பெருநகரங்களில் இருந்து சியோனிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சியோனி மாவட்டம் முழுவதும் ஓடும் சில முக்கிய ரயில்களின் பெயர்களாவன: நாக்பூர் ஜபல்பூர் பாசஞ்சர், நாக்பூர் சிந்த்வாரா எக்ஸ்பிரஸ் மற்றும் நாக்பூர் நிர் ஜபல்பூர் பாசஞ்சர். மேற்கூறிய அனைத்து ரயில்களும் ராமகோனா, இட்வாரி, ஹவ்பாத், உம்ரா நலா, கோரதித், மற்றும் கிலோத் போன்ற நகரங்கள் வழி இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சியோனி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த விமான இணைப்பை வழங்குகிறது. இதற்கு அருகிலுள்ள விமான நிலையம் நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் சியோனில் இருந்து சுமார் 154 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை கொண்டிருக்கிறது. இங்கிருந்து சியோனி செல்ல டாக்சிகள் மற்றும் பேருந்துகள் கிடைக்கின்றன. நாக்பூரில் இருந்து சியோனியை சாலை மார்க்கமாக அடைய சுமார் இரண்டு மணி நேரமே ஆகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City