இது ஹென்றி இர்வினால் வடிவமைக்கப்பட்ட விக்டோரியன் பாணியிலமைந்த ஒரு நினைவுச்சின்னமாகும். இந்த கலாச்சார வளாகம் மற்றும் டவுன் ஹால் 1887 ல் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் சரியான நேரத்தில் பழுது பார்க்கப்பட்டும், அசல் உருவத்தை மாற்றாமலும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் காட்சிக்கூடமாகத்திகழ்கிறது.
பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு அரங்கு ஒன்றும் இந்த வளாகத்திலுள்ளது. ஒரு மாநாட்டுக்கூடமும், ஒரு பழைய திரையரங்கமும் இங்கே உள்ளன. அந்தப் பழைய திரையரங்கம் நகரத்தின் பல வகையான பாரம்பரியமிக்க நிகழ்சிகளை ஏற்பாடு செய்ய பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications