ஜக்கு ஹில், சிம்லா

ஜக்கு ஹில் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்திலும், ரிட்ஜிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சிம்லாவின் மிக உயந்த சிகரமாக இருப்பதன் விளைவாக இமாலய மலைத்தொடர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களின் வியத்தகு காட்சிகளை இது வழங்குகிறது.

இந்த குன்றின் மீது புகழ்பெற்ற ஜக்கு கோயில் உள்ளது. தெய்வீக பொக்கிஷங்களை பாதுகாத்து வந்த யக்ஸா என்ற புராண கதாபாத்திரத்தின் பெயரிலிருந்து 'ஜக்கு' என்ற பெயர் ஏற்பட்டது.

கிராமியக்கதைகளின் படி, இந்துமத பெரும் காவியமான ராமாயண காலத்திலிருந்தே இந்த கோயில் இந்த இடத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது. இந்துக்கடவுளான ராமரின் தம்பியான லக்ஷ்மணனை குணப்படுத்த சஞ்சீவினி மூலிகையைத்தேடி வந்த அனுமன் இவ்விடத்தில் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது. சாகசத்தை விரும்பும் பார்வையாளர்கள் மலையேறுதலை இங்கு அனுபவிக்க முடியும்.

Please Wait while comments are loading...