சிம்லா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ரிட்ஜ், மலைத்தொடர்களின் மனதை மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. இது மேற்கில் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் ஒரு பெரிய திறந்தவெளியாக உள்ளது.
ரிட்ஜின் கிழக்குப்பகுதி லக்கார் பஜாருக்கு அழைத்துச்செல்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு மர கைவினைப்பொருட்களை வாங்கலாம். இங்கு நகரத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஒரு பெரிய நீர்த்தேக்கம் உள்ளது.
மே மாதத்தில் கோடைத்திருவிழா இங்கு நடைபெறுகிறது. இது தவிர, ரிட்ஜில் பல்வேறு அரசு விழாக்களும், உள்ளூர் கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்த இடம் அழகான சூழலால் நீண்டதூர நடைப்பயணத்துக்கு வாய்ப்பை அளிக்கிறது.
இந்த பிரபலமான இடத்தில, ஒரு தேவாலயம், நூலகம் மற்றும் ஏராளமான சிலைகள் கூடுதலாக ஈர்ப்பை சேர்கின்றன.



Click it and Unblock the Notifications