சிம்லா-கால்கா ரோட்டில் அமைந்துள்ள இந்தக்கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 6070 அடி உயரத்திலுள்ளது. ஓங்கி உயர்ந்து நிற்கும் ஓக் மரங்களும், அடர்ந்து வளர்ந்துள்ள ரோடோடென்டிரான் குறுஞ்செடிகளுமாக இருக்கும் இந்த இடம் ஒரு சிறந்த சுற்றுலத்தலமாகும்.
இங்கு சுற்றுலா பயணிகள் இந்தக்கோவிலைச்சுற்றியுள்ள இடங்களின் காண்பதற்கறிய காட்சிகளை ரசிக்க முடியும். புராணக்கதைகளின் படி, 250 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் நட்சத்திரங்களின் பெண் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தக்கோவிலானது தாரா தேவி மலையில் ஷோகி மற்றும் சிம்லாவிற்கு இடையே அமைந்துள்ளது. பார்வையாளர்கள் வாகனங்களின் மூலம் இந்தக்கோவிலை அடையலாம்.



Click it and Unblock the Notifications