Search
  • Follow NativePlanet
Share

ஷோகி – புத்துணர்வூட்டும் ஓய்வு ஸ்தலம்

7

ஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம் ஹிமாச்சல் மாநிலத்தின் முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. ஓக் மரங்களும், அலிஞ்சி எனப்படும் ஒருவகை மலைச்செம்பருத்தி மலர்த்தாவரங்களும் (பலவண்ணங்களில்) இப்பகுதியில் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு விளையும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ஜெல்லிகள், சிரப்கள் மற்றும் ஊறுகாய்களுக்கு ஷோகி மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

ஷோகி நகரத்தின் வரலாறு 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய-கூர்க்கா சண்டைகள் நடந்த காலகட்டம் வரை நீள்கிறது. 1815ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி மலாவ்ன் எனும் இடத்தில் நடந்த சண்டையில் கூர்க்கா இனத்தார் ஜமீன் பிரபுக்களிடம் தோற்றனர்.

பின்னர் ஆங்கிலேயர்களும் ஜமீன் பிரபுக்களும் சேர்ந்து கூர்க்கா இனத்தாரிடம் சஞ்ஜௌலி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். இதன்படி கூர்க்கா ஆட்சியில் இருந்த பகுதிகள் பழைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.

பின்னாளில் இந்த ஒட்டுமொத்த பகுதியும் - சிம்லா உட்பட - பாடியாலா மஹாராஜாவிடம் ஆங்கிலேயர்களால் அவரது விசுவாசத்திற்கு பரிசாக தரப்பட்டது.

ஷோகி நகரம் ஏராளமான கோயில்களை கொண்டிருப்பதால் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹனுமான் கோயில், காளி கோயில் மற்றும் தாரா தேவி கோயில் போன்றவை இவற்றில் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக அறியப்படுகின்றன.

ஷோகி நகரத்திற்கு வருகை தரும் பயணிகள் அருகிலுள்ள ஜாக்கூ மலைக்கும் விஜயம் செய்யலாம். இங்கு சில புராதனமான கோயில்கள் உள்ளன.

ஷோகி நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி  அமைந்துள்ளது.

சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் 21 கி.மீ தூரத்தில் உள்ளது.  மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும் உள்ளது.

கல்கா ரயில் நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இணைப்பு சேவைகள் உள்ளன. ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் மற்ற நகரங்களிலிருந்து ஷோகி நகரத்துக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

ஷோகி பிரதேசத்தின் பருவநிலை வருடம் முழுக்கவும் இனிமையானதாகவே காணப்படுகிறது. எனவே எல்லாப்பருவத்திலும் பயணிகள் இங்கு விஜயம் செய்யலாம்.  

ஷோகி சிறப்பு

ஷோகி வானிலை

சிறந்த காலநிலை ஷோகி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷோகி

  • சாலை வழியாக
    ஹிமாசல் பிரதேச மாநில அரசுப்பேருந்துகள்(HRTC) ஷோகி நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. டெல்லியிலிருந்து சிம்லாவுக்கு இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் ஷோகி நகரத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஷோகி நகரத்திற்கு அருகில் சிம்லா ரயில் நிலையம் உள்ளது. இது மீட்டர் கேஜ் பாதையாகும். இதுதவிர 7 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இது நாட்டின் இதர முக்கிய நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் ஷோகி சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் 21 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த விமான நிலையம் குலு மற்றும் டெல்லிக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது. பயணிகள் டாக்சிகள் மூலமாக விமான நிலையத்திலிருந்து ஷோகி நகரத்துக்கு வரலாம். மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும் 340 கி.மீ தூரத்தில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Mar,Thu
Check Out
13 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri