பிருந்தாவன் கோயில் எனும் பெயரே காலப்போக்கில் திரிந்து இப்படி பிந்த்ராபின் கோயில் என்று ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உள்ளூர் மக்களால் இந்த கோயில் தத்கேஷ்வரா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் சகர்தோட் ஆற்றங்கரையில் அமைதியான சூழலில் வீற்றிருக்கிறது. சில்வாசாவிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும், கன்வல் சுற்றுலாத்தலத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும் இந்த கோயில் ஸ்தலம் உள்ளது.
இது சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயிலாகும். இப்பகுதியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் இந்த கோயில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உயரமான மரங்கள் மற்றும் செழிப்பான தாவரங்கள் அடர்ந்த இயற்கைச்சூழலின் மத்தியில் இது அமைந்துள்ளது. பயணிகளின் வசதிக்காக மூன்று தங்கும் விடுதிவீடுகள், பொழுதுபோக்கு கூடம் மற்றும் உணவகம் ஆகியவையும் இந்த கோயில் வளாகத்தில் உள்ளன.



Click it and Unblock the Notifications