தற்போது தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக விளங்கும் சில்வாஸாவில் போர்த்துகீசியர்கள் பல கிறித்துவ தேவாலயங்களை அவர்களது தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கியிருக்கின்றனர்.
இவற்றில் பிரதானமாக அறியப்படும் இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் மறு பெயர் ‘தி சர்ச் ஆஃப் அவர் லேடி பயட்டி’ என்பதாகும். இது நகரப்பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ‘டிரைபல் கல்ச்சுரல் மியூசிய’த்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது.
1886-89ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 1889ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டது. மிகப்புராதனமான இந்த தேவாலயம் சில்வாஸாவின் தொன்மையான வரலாற்றின் சான்றாக வீற்றிருக்கிறது.
வெளிப்புறத்தில் அற்புதமான அலங்கார வளைவு அமைப்புகள் மற்றும் உட்புறத்தில் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவற்றுடன் பிரமிக்க வைக்கும் ஐரோப்பிய கலையம்சங்களுடன் இந்த தேவாலயம் காட்சியளிக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக 1912ம் ஆண்டின் மழைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு நில நடுக்கத்தில் இந்த தேவாலயம் சேதமடைந்துவிட்டது. புதுப்பிப்பு பணிகளுக்காக மூடப்பட்ட இது திரும்பவும் 1924ம் ஆண்டில் திறக்கப்பட்டது.
சொசைட்டி ஆஃப் பிலா எனும் அறக்கட்டளை அமைப்பு தற்போது இந்த தேவாலயத்தை நிர்வகித்து வருகிறது. சில்வாஸா பகுதியில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக இது அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications