சில்வாஸா – கான்வெல் சாலையில் சில்வாஸாவின் புறநகர்ப்பகுதியில் தபடா எனும் இடத்தில் இந்த சட்மலியா டீர் பார்க் அமைந்திருக்கிறது. பெயருக்கேற்றபடி இது பலவகையான மான் இனங்கள் வசிக்கும் சரணாலமாக அமைந்திருக்கிறது. இதன் உள்ளே பிளாக் பக், நில்கை, நான்கு கொம்பு மான், சம்பார் போன்ற பல்வேறு மான் வகைகளை இங்கு பார்க்கலாம்.
சாத்மலியா எனும் பெயருக்கு ஏழு பீடபூமிகள் என்பது பொருளாகும். எனவே இந்த மான்கள் பூங்கா வெகு பிரம்மாண்டமான பரப்பில் அமைந்துள்ளது என்பது புரிந்துகொள்ளலாம்.
இந்த பூங்காவின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப்பார்ப்பது இயலாத காரியமாகும். பயணிகள் வசதிக்கென ஒரு காட்சிக்கோபுரம் மற்றும் ஒரு ஏரி போன்றவை இந்த பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பூங்காவிற்கு விஜயம் செய்யும் பயணிகள மறக்காமல் தங்களுடன் கேமராவை எடுத்துச்செல்வது அவசியம். அப்போதுதான் இங்கு நடமாடும் அழகிய மான்களை புகைப்படமாக பதிவு செய்து கொள்ள முடியும்.
ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலான பருவம் இந்த பூங்காவிற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இந்த பூங்காவின் உள்ளே சுற்றிப்பார்த்து ரசிப்பதற்கு ஜீப் அல்லது குவாலிஸ் வாகன வசதிகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.



Click it and Unblock the Notifications