தெமங்லாங்கில் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் பார்க்கப்பட்ட இடங்களில் ஒன்றாக பாரக் நதியும், அதனை ஒட்டியுள்ள ஏழு நீர்வீழ்ச்சிகளும் அறியப்படுகின்றன. அருகருகே அமைந்திருக்கும் இந்த ஏழு நீர்வீழ்ச்சிகளும் இவ்விடத்தின் அழகை கூட்டுவதாக உள்ளன.
இம்மாவட்டத்தின் நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற முதன்மையான நீராதாரமாக பாரக் நதி உள்ளது. உங்களுடைய விடுமுறை நாட்களில் ஒரு நாளை இந்த நதியின் கரைகளில் கழிப்பது உண்மையிலேயே உங்களுக்கு மிகவும் திருப்தியை உண்டாக்கும் அனுபவமாக இருக்கும்.
தெமங்லாங்கில் சுற்றுலா வளர்ச்சி இன்னமும் அதன் ஆரம்ப நிலையிலேயே உள்ளதால், இங்கிருக்கும் ஏழு நீர்வீழ்ச்சிகள் இன்னமும் கைபடாத, புத்துணர்ச்சியுடைய இடங்களாக இருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றன.
அந்த நீலப் பச்சை தண்ணீர், அதன் மென்மையான சலசலத்து ஓடும் ஓசை, மலைகளிலிருந்து விழும் குளுமையான தண்ணீர் ஆகியவற்றின் காட்சி நம்முடைய நினைவுகளிலிருந்து எளிதில் அகலாது.
மேலும், இந்த ஏழு நீர்வீழ்ச்சிகளும் ஒரு சேர விழுவது அதன் அழகை பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. மேலும் ராப்ஃடிங் மற்றும் இதர நீர் விளையாட்டுக்களும் இங்கே சாதாரணமாக விளையாடப்பட்டு வரப்படுகின்றன. இந்நீர்வீழ்ச்சிகளில் ஒன்று கௌடோங் என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications