மணிப்பூர் மாநிலத்திலேயே தெமங்லாங் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான ஏரிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தெமங்லாங்கின் முக்கிய ஏரியாக ஸெய்லாட் ஏரி கருதப்படுகிறது.
ஒரு மலையின் மீதுள்ள தளத்தில் உள்ள இந்த ஏரி, அதன் கண்கவரும் அமைவிடம் மற்றும் அபரிமதிமான சாகசங்களுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. பைத்தான் வகை பாம்புகள், மீன்கள், ஆமைகள் மற்றும் பல்வகை நீர்ப்பறவைகளும் ஸெய்லாட் ஏரியை தங்களுடைய வசிப்பிடமாக கொண்டுள்ளன.
இதன் காரணமாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. பல்வேறு இடம்பெயரும் பறவைகளும் இந்த ஏரிக்கு ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கின்றன. ஸெய்லாட் ஏரி தற்போது மணிப்பூரில் உள்ள நான்கு வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெமங்லாங்கில் உள்ள மகோய்-க்கு அருகில் ஸெய்லாட் ஏரி உள்ளது. ஸெய்லாட் ஏரிக்கு அருகில் ன்ரோவ், குயிபோஃப் ஸெய் மற்றும் ஸம் ஸெய் உட்பட 6 ஏரிகளும் உள்ளன.



Click it and Unblock the Notifications