கொர்சம் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூப அமைப்பு தவாங் மலைநகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டில் மொன்பா இனத்தைச்சேர்ந்த லாமா பிரதார் எனும் மத குருவால் இது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அரைக்கோள வடிவிலான இதன் குமிழ் கோபுரம் மூன்று அடுக்குகளைக்கொண்ட ஒரு பீட அமைப்பின் மீது எழுப்பப்பட்டிருக்கிறது. நான்கு சிறிய ஸ்தூப அமைப்புகளும் இந்த பீட அமைப்பின் நான்கு மூலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
யாத்ரீகர்கள் வலம் வருவதற்கென கற்களால் அமைக்கப்பட்ட ஒரு சுற்றுவலப்பாதையையும் இந்த ஸ்தூப அமைப்பு கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications