Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை – இனி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பக்தர்கள் நடைபாதையில் செல்லலாம்!

திருப்பதியில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை – இனி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பக்தர்கள் நடைபாதையில் செல்லலாம்!

திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரமாக திருப்பதி நடைபாதையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுத்தை ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில் கூண்டுக்குள் அகப்பட்டது, இனி பக்தர்கள் நிம்மதியாக எந்த பயமும் இல்லாமல் நடக்கலாம் என அதிகாரிகள் கூறினர்!

பிடிபட்ட நான்காவது சிறுத்தை

திருமலை வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமைல் அருகே சிறுத்தை பிடிபட்டது. இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் பிடிபட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், 4 வது சிறுத்தையை பிடிக்கும் முயற்சி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

1

தண்ணி காட்டி வந்த சிறுத்தை

கடந்த ஒரு வாரமாக அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுனர். வழித்தடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள், ஒவ்வொரு இரவும் சிறுத்தை உருமறைப்பு கூண்டுக்கு அருகில் வருவதைக் காட்டுகிறது, ஆனால் அது வந்து செல்வதும் போவதுமாக இருந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு பிடிப்பட்டது.

சிறுத்தைகளை பிடிக்க 'ஆபரேஷன் சீட்டா'

இதையடுத்து வனத்துறையினர் அதனை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு மாற்றினர். ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆறு வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட பிறகு பிடிபட்ட மூன்றாவது சிறுத்தை இதுவாகும். சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து TTD நிர்வாகமும், வனத்துறையும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததோடு கூடுதலாக சிறுத்தையை பிடிப்பதற்காக 'ஆபரேஷன் சீட்டா' (Operation Cheetah) தொடங்கப்பட்டது.

SV உயிரியல் பூங்காவில் சிறுத்தைகள்

ஆபரேஷன் சீட்டா தொடங்கப்பட்ட பின்னர், ஆகஸ்ட் 14ம் தேதி சுமார் 4-5 வயதுடைய பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு ந்து வயதுடைய ஆண் சிறுத்தை பிடிபட்டது. முன்னதாக, சிறுத்தை தாக்கிய மூன்று வயது சிறுவனை மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 25 ஆம் தேதி வனத்துறையினர் சிறுத்தையைப் பிடித்தனர். அந்த மிருகம் சிறுவனை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்றது, ஆனால் அது பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களால் துரத்தப்பட்டது. பிடிபட்ட அனைத்து சிறுத்தைகளும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டன.

2

பக்தர்களுக்கு இனி அச்சுறுத்தல் இல்லை

ஆகஸ்ட் 27 ஆம் தேதி நான்காவது சிறுத்தையும் பிடிபட்ட பின்னர், ஆபரேஷன் சீட்டா முடிந்துவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான குழு தலைவர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன் பக்தர்கள் இனி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நடைபாதையில் நடந்து செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் படியும், பகல் நேரங்களில் செல்லும் படியும் TTD கேட்டுக் கொண்டுள்ளது!

மேலும் 500 ட்ராப் கேமராக்கள்

சிறுத்தை சிக்கிய இடத்தில் சிசிஎப்ஓ நாகேஸ்வரராவ் ஆய்வு செய்தார். "சிறுத்தை எஸ்வி உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு ஆண் சிறுத்தை, இதனுடைய வயது 2 என்றும் அவர் கூறினார். ஏற்கனவே நடைபாதையில் 300 கேமராக்கள் உள்ளன எனவும் கூடுதலாக மேலும் 500 ட்ராப் கேமராக்கள் அமைப்போம்' எனவும் அவர் கூறினார்.

More News

    Read more about: tirupati andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+