Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » கத்தோலிக் ரோசரி சர்ச்

கத்தோலிக் ரோசரி சர்ச், தலச்சேரி

28

கத்தோலிக் ரோசரி சர்ச் என்று அழைக்கப்படும் இந்த புராதன தேவாலயம் கேரள கத்தோலிக்க பிரிவினர் பெரிதும் பூஜிக்கும் ஒரு ஆன்மீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. தலச்சேரி கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த தேவாலயம் தனது வரலாற்றுப் பின்னணி மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.

அக்காலத்திலேயே லண்டன் நகரிலிருந்து வரவழைக்கப்பட்ட வண்ண அலங்கார கண்ணாடிகளால் இது அலங்கரிக்கப் பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டின் துவத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த இந்த கத்தோலிக் ரோசரி சர்ச்’ கேரளா மாநிலத்தின் புராதன தேவாலயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. காலனிய ஆட்சிக்காலத்தின் வரலாற்றில் இது தனக்கான இடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உருவான காலத்திலிருந்தே இந்த தேவாலயத்தின் நிர்வாக உரிமையானது பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. ஆதியில் இது கோவா ஆர்ச்பிஷப் கட்டுப்பாட்டில் 1609ம் ஆண்டு வரை இருந்து வந்துள்ளது.

பின்னர் கொடுங்காலூர் ஆர்ச்டையோசிஸ் சபையால் நிர்வகிக்கப்பட்டு தற்சமயம் கண்ணூர் ஆர்ச்டையோசிஸ் சபையின் நிர்வாகத்தில் உள்ளது. இந்த தேவாலய கல்லறை தோட்டத்தில் பல முக்கியமான காலனிய அதிகாரிகளின் கல்லறைகள் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்து தேசத்திலிருந்து புறப்பட்டு வந்து இந்தியாவின் நிர்வாகிகளாக வாழ்ந்து மறைந்த ஆங்கிலப்பிரஜைகளின் கல்லறைகளையும் அதிலுள்ள பெயர்களையும் காணும்போது நம்மையும் அறியாமல் வரலாற்றின் ஸ்பரிசம் நம்மை தீண்டுவதை உணர்ந்து சிலிர்க்காமல் இருக்க முடியாது. வரலாற்று ஆர்வலர்கள் மிக விரும்பி இப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue