Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » ஃபிஷர்ஃபோக் டெம்பிள் (மீனவர் கோயில்)

ஃபிஷர்ஃபோக் டெம்பிள் (மீனவர் கோயில்), தலச்சேரி

28

ஃபிஷர்ஃபோக் டெம்பிள் என்று பயணிகளால் அழைக்கப்படும் இந்த மீனவர் கோயிலானது, கண்ணூரிலிருந்து தலச்சேரி மற்றும் தலச்சேரியிலிருந்து மாஹே வரை நீண்டிருக்கும் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. அற்புதமான இடத்தில் அமைந்திருப்பதால் இந்த கோயில் சுற்றுலா முக்கியத்துவத்தை பெற்று விட்டது. கோயிலின் பின்னணியில் நீண்டு பரந்து கிடக்கும் கடற்கரையின் அமைதியும், ஏகாந்தமும் பார்த்தவுடன் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் காட்சியளிக்கின்றன.

மீனவ மக்களின் வாழ்க்கையில் கடலுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சின்னமாக இந்த கோயில் வீற்றுள்ளது. எண்ணற்ற ஐதீக கதைகளும் புராணங்களும் இந்தக் கோயிலைச் சுற்றி பிணைந்துள்ளன.

வளத்தையும் கருணையையும் வாரித்தரும் கடல் தெய்வத்துக்கு தங்கள் நன்றியையும் பக்தியையும் காணிக்கையாக அளிப்பதற்காகவே இக்கோயிலை மீனவப்பழங்குடியினர் கட்டியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த கோயிலை அடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்ட மைதானம் ஒன்று அமைந்துள்ளது. பேருந்துகள் அல்லது ரிக்ஷாக்கள் மூலம் தலச்சேரி நகரப்பகுதியிலிருந்து இக்கோயிலை அடையலாம். ஏகாந்தமான இயற்கைச்சூழல் மற்றும் தெய்வீக சாந்தம் போன்ற அம்சங்களை நாடுவோர்க்கு இது மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri