Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி

ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி, தலச்சேரி

28

ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி எனும் இந்த கட்டமைப்பு பாதியில் நின்று தோல்வியாக கருதப்பட்ட ஒரு வரலாற்றுகால திட்டத்தின் மிச்சமாகும். ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஸ்தலமான இது தலச்சேரி நீதிமன்றம் மற்றும் முனிசிபல் மைதானத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

மிக வித்தியாசமான கடல் காட்சி தளம் என்று இதனை சொல்லலாம். ஒரு பூங்காவின் மீதிருந்து கடலை மிக அருகில் பார்த்து ரசிக்கக்கூடிய காட்சித்தள அமைப்பான இது ஒரு உன்னதமான ரசனைப்படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தலச்சேரியில் சப்-கலெக்டராக நிர்வாகப் பொறுப்பேற்றிருந்த ஈ.என்.ஓவர்பர்ரி எனும் ஆங்கிலேயர் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை 1879ம் ஆண்டு துவங்கியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக அவரால் இத்திட்டத்தை முடிக்கமுடியாமல் போயிற்று. எனவே தான் இந்த ஸ்தலம் அவரது பெயராலேயே ‘ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி’ என்று அழைக்கப்படுகிறது. பின்னாளில் இந்த பூங்காப்பகுதி புதுப்பிக்கப்பட்டு தற்சமயம் தலச்சேரி பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இது மாறிவிட்டது.

மாலை நேரத்தில் இந்த பூங்காவிலிருந்து அரபிக்கடலை ரசித்து மகிழ்வதற்காக பயணிகள் அதிக அளவில் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள ஒரு காட்சி கோபுரத்தின் மீது ஏறி சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

இங்கு காஃபி ஷாப் ஓன்றும் பயணிகளின் வசதிக்காக அமைந்துள்ளது. மிகுந்த மனநிறைவைத் தரும் ஒரு வித்தியாசமான பூங்கா இது என்பதால் தலச்சேரிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த ‘ஓவர்பர்ரி'ஸ் ஃபோலி’ க்கு விஜயம் செய்வது நல்லது. சப் கலெக்டர் பங்களாவுக்கு அருகில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed