ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் இந்த பிஸால்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான கோகர்ணேஷ்வரர் கோயிலுக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது.
இது தவிர இங்கு பனஸ் ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பிஸால்பூர் அணைக்காகவும் இது இப்போது ஒரு முக்கிய ஸ்தலமாகிவிட்டது. இந்த அணையானது இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் உள்ளூர் குடிநீர்த்தேவையை நிறைவேற்றும் இலக்குடனும் இரண்டாவது கட்டத்தில் சுற்றியுள்ள பிரதேசத்தின் நீர்ப்பாசன தேவையை நிறைவேற்றுவதற்காகவும் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. 574 மீட்டர் நீளமும் 39.5 உயரமும் உடையதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications