Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் இருக்கும் 10 அழகான ஏரிகள்...இதில் எங்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?

தென்னிந்தியாவில் இருக்கும் 10 அழகான ஏரிகள்...இதில் எங்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?

தென்னிந்தியா பல அழகான ஏரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமான அழகையும், கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஏரிகள், காடுகள் இருப்பதன் காரணமாகவே பல இடங்களில் முக்கிய சுற்றுலா தலங்களாக மாறி உள்ளன. இன்னும் சில இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக செயற்கையாகவும் ஏரிகளை அமைத்துள்ளார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் அவசியம் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய தென்னிந்தியாவின் டாப் 10 ஏரிகளை தெரிந்து கொள்ளலாம்.

10 beautiful Lakes in South India

வேம்பநாடு ஏரி

இந்தியாவின் மிக நீளமான ஏரிகளில் ஒன்றாகவும், கேரளாவின் மிகப்பெரிய ஏரியுமான விளங்குவது வேம்பநாடு ஏரி. பல இயற்கை அம்சங்களை உள்ளடக்கியது. உப்பங்கழிகள், படகு இல்லங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. படகு இல்லங்களில் தங்கி, இங்கு வரும் விதவிதமான பறவைகளை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிவது உண்டு.

பூக்கோடு ஏரி

இந்த ஏரி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளது. காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரி ஒரு நன்னீர் ஏரியாகும். இது படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளது. இது இந்திய வரைபடம் போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதன் அழகை கண்டு ரசிப்பதற்காக இதைச் சுற்றி பல வ்யூ பாண்டுகளையும் அமைத்துள்ளார்கள்.

கொடைக்கானல் ஏரி

தமிழ்நாட்டில் கொடைக்கானல் ஒரு முக்கியமான சுற்றுலா தலம் ஆகும். இங்கே உள்ள கொடைக்கானல் ஏரி சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஒன்றாக உள்ளது. ஏரியில் படகு சவாரி செல்லுதல், ஏரியை சுற்றி சைக்கிள் செல்வது போன்றவை முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். ஏரியை சுற்றி வாக்கிங் செல்வதற்கும், குதிரை சவாரி செய்வதற்கும் கூட வசதிகள் உள்ளது.

புலிகாட் ஏரி

இது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாகும். ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் அமைந்துள்ள புலிகாட் ஏரி புலம்பெயர்ந்த பறவைகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. இந்த ஏரியில் ஃபிளமிங்கோ பறவைகள் அதிகமாக உள்ளன; புகைப்பட ஆர்வலர்களின் சொர்க்க பூமியாக இந்த ஏரி அமைந்துள்ளது.

ஊட்டி ஏரி

இது நீலகிரி மலைகளில் உள்ள ஒரு செயற்கை ஏரியாகும். இந்த ஏரி, யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட அழகிய இயற்கை அம்சங்களை கொண்டதாகவும், படகு சவாரி செல்வதற்கு ஏற்ற வகையிலும் உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஹூசைன் சாகர் ஏரி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்த ஏரி இதய வடிவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மையத்தில் ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலை உள்ளது. இது பார்ப்போரை கவரும் விதமாக அமைந்துள்ளது. இதை காண்பதற்காகவும், அமைதியை அனுபவிப்பதற்காகவும் ஏராளமானோர் இங்கு வருவது உண்டு.

ஹெப்பால் ஏரி

கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு அருகில் உள்ள ஹெப்பால் ஏரி வளமான நிலப்பரப்புகள் மற்றும் அழகிய பறவைகளின் வாழ்விடமாக உள்ள அமைதியான இடமாகும். இது புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு இடம் இந்த ஏரியாகும்.

பேரிஜம் ஏரி

கொடைக்கானலுக்கு அருகில் ஒதுக்கு புறமான ஏரியான அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இயற்கை எழில் மிகுந்த பகுதியாகும். இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் அழகிய புகலிடமாக விளங்குகிறது. இதன் பசுமையான, அமைதியான சூழலை அனுபவிக்க அதிகமானவர்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

வீராணம் ஏரி

2400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வீராணம் ஏரி மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. அழகிய நிலப்பரப்புகளைக் கொண்ட இந்த ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இதன் அழகான அமைதியை ரசிப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

அனேகர் ஏரி

பச்சைமலைகளால் சூழப்பட்ட அனேகர் ஏரி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. படகு சவாரி, மீன்பிடித்தலுக்கு மிகவும் பிரபலமானது. பறவைகளை பார்வையிடவும், அதன் அமைதியான சூழ்நிலை ரசிக்கவும் பலரும் இங்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த ஏரி அமைந்துள்ளது.

More News

    Read more about: tamil nadu lake
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+