Search
  • Follow NativePlanet
Share
» »கோடிகளில் புரளும் செல்வமிக்க 10 கோவில்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

கோடிகளில் புரளும் செல்வமிக்க 10 கோவில்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

By Balakarthik Balasubramanian

கலாச்சாரத்தில் வேறுபட்டு காணப்படும் இந்தியாவில், மத நம்பிக்கை என்பது மக்கள் மனதில் மெழுகு போல் உருகி வழிந்தோடுகிறது. நம் நாட்டில் ஆலயங்களின் எழுச்சியானது ஆங்காங்கே பல இடங்களில் காணப்பட, தங்கள் மனதில் இருக்கும் கவலைகளுக்கு ஆறுதலாய், மக்களும் கடவுள் பாதம் பிடித்து வேண்டுவது வழக்கமாகிறது. கண் கண்ட தெய்வமெனவும், கடவுள் தங்கள் மனக்கவலைகளை தீர்ப்பார் எனவும் உலகம் முழுவதும் நம்புகின்றனர்.

நினைவுக்கு எட்டாத காலத்தில் வாழ்ந்த பல்வேறு மன்னர்களாலும், வம்சத்தினராலும் ஹிந்து மதப் பயிற்சியானது அளிக்கப்பட்டு, ஆலயங்கள் நிறுவி, அங்கே அவற்றின் அழகிய அடையாளங்களாக பல கோணங்களில் கலை மற்றும் கலாச்சாரத்தையும் புகுத்தி, அதற்கான உடைமைகளையும் தந்து உரிமையாக அதனை பராமரித்தும் வந்தனர்.

ஆலயங்கள் பல காணப்பட, அவற்றின் மீது அனைவருக்கும் மகத்தான நம்பிக்கை இருந்ததோடு, அங்கே சில அதிசயங்கள் நிகழ, அது நம் மனதில் ஆச்சரியத்தையும் தருகிறது. இதனால், உலகம் முழுவதும் எண்ணற்ற பக்தர் கூட்டம் கூட, புனிதமான இருப்புகளும், வளம் கொழிக்கும் கட்டிடக் கலையுமென இணையற்ற புகழை தாங்கி கொண்டு நிற்கிறது.

இவ்வாறு எட்டு திக்கும் குரல் கேட்க, நிறைய ஆலயங்கள், சீரமைத்து நன் கொடையின் வாயிலாக பக்தர்களால் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இந்த நன்கொடையானது கடவுளுக்கு செலுத்தும் நன்றியாக மட்டுமே கருதப்பட, லஞ்சமாக ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை. பக்தர்கள் தங்களுடைய காணிக்கையாக பொன் (தங்கம்), வெள்ளி, வைரமென தர...கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் இந்த சொத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது.

இப்பொழுது, அப்பேற்ப்பட்ட செல்வம் கொழிக்கும் ஆலயங்கள் எவை என்பதையும், நாட்டில் அனைவரும் பிரார்த்திக்கும் ஆலயங்கள் எவை என்பதையும் நாம் பார்க்கலாம்.

 ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம் – திருவனந்தபுரம், கேரளா:

ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம் – திருவனந்தபுரம், கேரளா:

நம் நாட்டில் மட்டும் இத்தகைய செல்வம் கொழிக்கும் ஆலயங்கள் காணப்படாமல் உலகம் முழுவதுமே காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயமானது, மில்லியன் அற்று பில்லியன் அற்று ட்ரில்லியன் கணக்கில் செல்வம் குவியும் ஒரு ஆலயமாகும். இந்த வளக் கணிப்பானது வரைப்படத்தில் தனக்கென்ற ஒரு தனி இடத்தை இந்த ஆலயம் பிடித்தபிறகே எனவும் சொல்லப்படுகிறது.

இந்த புதையல்கள் அனைத்தும், ஆலயத்தின் வளாகத்தில் இரகசிய பெட்டகங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கபடுகிறது எனவும் தெரிய வருகிறது. இந்த பெட்டகங்கள் இன்று வரை திறக்கப்படாத நிலையில், இந்த புதையல் பெட்டியில் இருப்பவையாக தங்க ஆபரணங்களும், கிரீடங்களும், வைரங்களும், வைரங்களுடன் சேர்ந்த பழங்கால நகைகளும், மரகதங்களும் அடங்கும். 18 அடி நீளமுள்ள தங்க சங்கிலி ஒன்று விஷ்ணு பெருமானுக்கு அணிவிக்கப்பட்டிருக்க, இன்றைய விலைமதிப்பில் இதன் மதிப்பானது 100 கோடியை தாண்டுகிறது.

Manu Jha

 திருமலா திருப்பதி வெங்கடேஷ்வர ஆலயம் – ஆந்திர பிரதேசம்:

திருமலா திருப்பதி வெங்கடேஷ்வர ஆலயம் – ஆந்திர பிரதேசம்:

கடந்த பத்தாண்டு வரை, இந்தியாவில் காணப்படும் செல்வம் கொழிக்கும் ஆலயங்களில் திருப்பதி வெங்கடேஷ்வர ஆலயமும் ஒன்றாகும். ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம் தன்னுடைய பெரும் தொகைக்கொண்ட சொத்து விபரங்களை வெளிக்கொண்டுவர, திருப்பதி அதற்கு அடுத்த இடத்தை பிடித்து செழிப்புடன் காணப்படுகிறது.
வெங்கடேஷ்வரரின் தரிசனம் பெற எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்ல, இங்கே குல தெய்வத்திற்கு 1000 கிலோகிராம் விலை மதிப்புள்ள நகை அணிவிக்கப்பட்டிருக்க, இங்கே தரப்படும் பிரசித்திபெற்ற இலட்டு வின் ஒரு வருட வருமானமே 11 மில்லியன் டாலராம். அதேபோல், இந்த ஆலயத்திற்கு தரப்படும் நன்கொடைகளின் மதிப்பானது சுமார் 700 கோடியை தொட்டு, ஆச்சரியத்துடன் எண்ணப்படுகிறது.

Daimalu

 ஷீரடி சாய் பாபா சன்ஸ்தன் – ஷீரடி:

ஷீரடி சாய் பாபா சன்ஸ்தன் – ஷீரடி:

மாநில பிரிவினை இருந்தாலும், ஷீரடி சாய்பாபாவை வணங்கி தங்கள் மனதில் நம்பிக்கையை வேரூன்றி மன நிம்மதியை கொண்டு அனைத்து பகுதியினரும் திரும்புகின்றனர். இதுவே இந்த ஆலயத்திற்கு வந்து திரும்பும் பக்தர்கள் நன்கொடை தருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால், நம் நாட்டில் மூன்றாவதாக செல்வம் கொழிக்கும் ஒரு இடமாக சீரடி சாய்பாபா ஆலயம் காணப்பட, மதம், சாதி, சமயம் மறந்து அனைத்து பிரிவினரும் இங்கே வருவதும் வழக்கமாகும்.
தெய்வத்தின் மீது தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஜொலிக்க, அதன் விலை மதிப்பானது சுமார் 32 கோடியாக இருக்கிறது. இங்கே சேரும் வெள்ளி காசுகளின் மதிப்பானது 10 இலட்சத்தை எட்ட, வருடம்தோரும் இங்கே சேரும் நன்கொடையானது கணக்கிடுகையில் சுமார் 400 கோடி என்றும் கூறுகின்றனர்.

Amolthefriend

 வைஷ்னோ தேவி – காட்ரா:

வைஷ்னோ தேவி – காட்ரா:

நாட்டில் காணும் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் செல்வம் மிகுந்த ஆலயங்களுள் ஒன்றாக மாதா வைஷ்னோ தேவி ஆலயம் காணப்பட, உலகம் முழுவதும் எண்ணற்ற பக்தர்கள் இங்கே வந்து செல்கின்றனர்.

இந்த ஆலயத்தின் மீது மத நம்பிக்கையானது வேறூன்றி காணப்பட, பெரும் அளவில் ஆலயத்திற்கு நன்கொடை வழக்கப்படுவதும் வழக்கமாகிறது.
வருடம்தோறும் 8 மில்லியன் யாத்ரீகர்கள் கூடும் இந்த ஆலயம், திருப்பதிக்கு அடுத்ததாக அனைவராலும் பார்க்கப்படும் ஒரு ஆலயமாகவும் விளங்குகிறது.

Raju hardoi

சித்தி விநாயக ஆலயம் – மும்பை:

சித்தி விநாயக ஆலயம் – மும்பை:

இந்த ஆலயத்தின் பாத அபிஷேகமானது 25,000 முதல் 200,000 வரை ஒரு நாளில் காணப்படுகிறது. மிகுதியான பாத அபிஷேகம், மிகுதியான செல்வமென இருக்க...இந்த ஆலயத்தின் வருடாந்திர வருமானமானது 48 கோடி முதல் 125 கோடிகள் வரை என இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த ஆலயத்தின் குவிமாடமானது தங்கம் கொண்டு கவர்ந்திருக்க, அதன் எடையானது 3.5 கிலோகிராம் இருக்கிறது. கணேஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சிலையானது 200 வருடங்களுக்கு மேலாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

Abhijeet Rane

 பொற் கோவில் – அமிர்தசரஸ்:

பொற் கோவில் – அமிர்தசரஸ்:

சீக்கியர்களின் புனித ஆலயமான ஸ்ரீ ஹர்மந்திர் ஷாஹிப் ஆலயம் ‘பொற்கோவில்' என்றழைக்கப்படும் பிரசித்திபெற்ற ஆலயமாகும். இங்கே ஆலயத்தின் மத்தியில் தங்கம் பூசப்பட்டிருக்க, அதனாலே இப்பெயர் பெற்றதாகவும்...இங்கே காணும் தங்க நிறமும், சுவாரஸ்யமூட்டும் கட்டிடக்கலையும் மக்களை ஈர்த்து நடைப்பயணம் மூலமாக தன்னை பார்க்க அன்புடனும் அழைக்கிறது இந்த ஆலயம்.

இங்கே காண வரும் அனைத்து பக்தர்களுக்கும் 24 மணி நேர உணவு வசதியானது தரப்பட, பலீபீடமானது புனித குரு கிராண்ட் ஷாகிப்பில் காணப்படுகிறது. இங்கே வைரமும், விலைமதிப்புள்ள கற்களும் சேர்த்து பதிக்கப்பட்டும் இருக்கிறது.

Ssteaj

 சபரிமலா ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் – பத்தனம்திட்டா:

சபரிமலா ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் – பத்தனம்திட்டா:

ஒவ்வொரு வருடமும் 40 முதல் 50 மில்லியன் வரை பக்தர்கள் கூடும் இடமான சபரிமலையின் ஆலயத்தை காண பெரும் திரளாக பக்தர்கள் வருவது வழக்கமாகும். இந்த ஆலயமானது வருமானம் பொறுத்தவரை திருப்பதி ஆலயத்தையும் முந்துகிறது.

இங்கே ஓர் சுவாரஸ்யமான விசயமாக, ஆண்கள் மட்டுமே யாத்ரீகர் தளத்திற்குள் அனுமதிக்கப்பட, நவம்பர் மாதத்தின் நடுவில் தொடங்கி ஜனவரி மாத பாதியில் இந்த பயணம் முடிவடைகிறது.

இந்த யாத்ரீக தளத்திற்கு 2016 முதல் 2017 வரை ஈட்டப்பட்ட வருவாயானது 245 கோடிகள் என்றும் நமக்கு தெரிய வருகிறது.

Official site

 குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் – திருச்சூர்:

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் – திருச்சூர்:

கிருஷ்ண பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயமானது ‘குருவாயுரப்பன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதனை ‘பூ வைகுண்டம்' எனவும் அழைக்கப்பட, பூமியில் விஷ்ணு பெருமானுக்கான புனித உறைவிடமெனவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தின் ஈர்ப்பினால் 10 முதல் 15 மில்லியன் பக்தர்கள் வரை வருடம்தோறும் வந்து செல்ல, தென்னிந்தியாவில் காணப்படும் வளம் கொழிக்கும் ஆலயங்களுள் இதுவும் ஒன்று என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு நாளும் 50,000 பேர் இங்கே கூட, விழாக்காலங்களில் வருபவர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கவும் செய்கிறது.
இந்த ஆலயத்திற்கு 400 கோடிகள் வரை கார்பஸ் நிதியானது கிடைக்க, மாதம்தோறும் உண்டியலில் சேரும் தொகை மட்டும் 3 கோடியாம்.

Official site

 மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் – மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் – மதுரை:

ஒரு நாளைக்கு 20 லிருந்து 40 ஆயிரம் வரை கூடும் ஒரு ஆலயமாக மீனாட்சியம்மன் ஆலயம் காணப்பட, 60 மில்லியன் வருவாயானது வருடந்தோறும் ஈட்டப்படுவதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

இங்கே காணும் உயர்ந்த கோபுரங்கள் ஆலயத்துக்கு பெயர்பெற்று விளங்க, 45 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரம் வரை அவை காணப்படுகிறது. மீனாட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், மின்னும் வைர மூக்குத்தியை அம்மனுக்கு அணிவித்தும் வருபவர்களை காட்சிகளால் ஆச்சரியப்படுத்துகிறது.

G.Sasank

 சோம்நாத் ஆலயம் – குஜராத்:

சோம்நாத் ஆலயம் – குஜராத்:


17 முறை படையெடுப்பின்போது சூரையாடப்பட்டு, சீர்குலைக்கப்பட்ட இந்த ஆலயமானது, தங்கம் மற்றும் வெள்ளியின் களஞ்சியம் என்றழைக்கப்படுகிறது.
நாட்டில் காணப்படும் செல்வம் கொழிக்கும் ஆலயங்களுள் ஒன்று தான் இந்த சோம்நாத் ஆலயமாகும்.

இந்த ஆலயத்தில் காணப்படும் தனித்தன்மை மிக்க கட்டிடக்கலையும், மகத்தான மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் நம்மை வெகுவாக கவர்கிறது. அதி நவீன முறையில் இதன் அமைப்புகள் காணப்பட, இந்த தெய்வீக பூமியை பலரும் ஆர்வத்தோடு வந்து பார்த்து ஆச்சரியத்துடனும் செல்கின்றனர்.

Anhilwara

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more