» »பருவ மழைக் காலத்தில் தோகை விரித்தாடும் மயில்களை காண நீங்கள் செல்ல வேண்டிய 5 இடங்கள்!!

பருவ மழைக் காலத்தில் தோகை விரித்தாடும் மயில்களை காண நீங்கள் செல்ல வேண்டிய 5 இடங்கள்!!

By: Bala Karthik

இந்தியன் பீபௌல் என நாம் மயிலை பொதுவாக அழைக்க, இந்தியாவின் தேசிய பறவை மயில் என்பதனையும் நாம் அனைவரும் அறிவோம். நாட்டினை குறிக்கும் காரணங்களுள் ஒன்றாகவும் இந்த தேர்வு அமைய, 'நாட்டில் நான் இருக்க வேண்டிய இடத்தை நான் தான் தீர்மானிப்பேன்' என மயிலும் நினைத்திட, நாட்டின் சில இடங்களில் தனித்துவமிக்க சிறப்போடு மயில்களும் காணப்படுகிறது.

நம் நாட்டில் மயில் தோகையின் நிறத்தை கருணை மற்றும் துடிப்பான நிறமாக கருதப்பட, கலாச்சார வேறுபாட்டையும், இந்தியாவின் பாரம்பரியத்தையும் கூட இவை உணர்த்துகிறது. அத்துடன் இந்த பறவைகள் நாட்டில் எங்கும் பரவி காணப்பட, அனைவரும் பறவையை அடையாளம் கண்டுக்கொள்ளவும் எளிதாகிறது. இவ்வாறு தேவைகளுக்கேற்ப மயில்கள் அன்று முதல் காணப்பட, 1963 ஆம் ஆண்டு, அழகிய பறவையான மயில், இந்தியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய கட்டாய இடங்களை தெரிந்துக்கொண்டு, நம் நாட்டின் கருணைமிக்க பறவையையும் பார்த்து மகிழலாம்.

 பங்கபுரா மயில் சரணாலயம், கர்நாடகா:

பங்கபுரா மயில் சரணாலயம், கர்நாடகா:


கர்நாடகாவில் காணப்படும் குறைந்த பேர் வந்து செல்லும் இந்த பங்கபுரா சரணாலயம், இந்தியாவில் காணப்படும் சில சரணாலயங்களுள் ஒன்றாகும். இங்கே மயில்களை பாதுகாத்துவர, இந்திய அரசாங்கத்தால் மயில்கள் அதிகம் காணப்படும் ஒரு இடமெனவும் அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, இவ்விடம் மயில்கள் பாதுகாப்பு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதியில் ஆயிரம் மயில்களுக்கு மேல் காணப்பட, பங்கபுரா கோட்டையில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. பெங்களூரு - பூனே நெடுஞ்சாலையிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் காணப்பட, இவ்விடம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எல்லா நாட்களும் திறந்திருக்கும்.

Dennis Jarvis

 விராலி மலை மயில் சரணாலயம், தமிழ்நாடு:

விராலி மலை மயில் சரணாலயம், தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் காணப்படும் சிறிய நகரமான விராலி மலை திருச்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இவ்விடம் இரண்டு காரணங்களுக்கு பிரசித்திபெற்று விளங்க, முதலாவதாக மயில் சரணாலயத்திற்கும், இரண்டாவதாக சண்முகநாதர் ஆலயத்திற்கும் பிரசித்திபெற்று விளங்குகிறது. மயில்கள் தன்னுடைய அழகிய தோகையை இழுத்துக்கொண்டு இந்த சரணாலயத்தை வலம் வருவது இங்கே இயற்கையாக மயில்களின் இருப்பிட சுதந்திரத்தை நமக்கு உணர்த்துகிறது.

இந்த ஆலயமானது மலை உச்சியில் அமைந்திருக்க, 210 படிகள் ஏறி நாம் கடவுளை தரிசிக்க வேண்டியதாக இருக்கிறது. பழம்பெரும் இடமான இவ்விடம், பரதநாட்டியம் தழைத்தோங்கிய ஒரு இடமெனவும் நமக்கு தெரிய வருகிறது. இந்த ஒட்டுமொத்த இடத்தை கானகங்கள் சூழ்ந்திருக்க, இயற்கையை ரசிப்பவர்களுக்கு எண்ணற்ற இன்பத்தை மனதில் அள்ளி தெளிக்கிறது இவ்விடம்.

Anand Chitravelu

 டண்டேலி வனவிலங்கு சரணாலயம், கர்நாடகா:

டண்டேலி வனவிலங்கு சரணாலயம், கர்நாடகா:

கர்நாடகா மற்றும் கோவா எல்லைப்பகுதியின் அருகில் காணப்படும் அழகிய இடமான டண்டேலி சாகச செயல்களுக்கு பிரசித்திபெற்ற இடமும் கூட. இந்த பகுதியில் எண்ணற்ற இயற்கை காட்சிகள் எங்கும் சூழ்ந்திருக்க, நிறைய விலங்கு மற்றும் பறவைகளுக்கு வீடாக டண்டேலியின் அடர்ந்த காடுகள் விளங்குகிறது.

பறவை ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த சரணாலயம் சொர்க்கமாக அமைய, 200 வகையான பறவை இனத்தை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. இந்திய மயில் அல்லது மயில்கள் மற்றும் இந்திய யானைகளை இங்கே பொதுவாக நம்மால் பார்க்க முடிய, இவற்றை தவிர்த்து மலபார் பல வண்ணங்களை கொண்ட ஹார்ன்பில், ஆரஞ்ச் தலை கொண்ட சண்டையிடும் பறவை, ப்ளேக்-நாப்புட் மோனார்ச் ஆகிய சில பறவைகளையும் நம்மால் இந்த சரணாலயத்தில் பார்க்க முடிகிறது.

Mprasannak

 மொரச்சி சிஞ்சோலி, மகாராஷ்டிரா:

மொரச்சி சிஞ்சோலி, மகாராஷ்டிரா:

பூனேவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு கிராமம் தான் மொரச்சி சிஞ்சோலி ஆகும். இந்த பெயருக்கான அர்த்தமாக, ‘புளி மரங்கள் மற்றும் மயில் ஆட்டத்தின் நகரம்' என்றும் அழைப்பர். மேலும் இவ்விடம், பாதுகாக்கப்படாத அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இடமாக காணப்பட, இந்த கிராமம் முழுவதும் மயில்களின் மகிழ்ச்சியை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த மயில்கள் உள்ளூர் வாசிகளுடன் இங்கேயே வாழ பழகிக்கொள்ள, சுற்றுலா பயணிகளுடன் ஒட்ட கொஞ்சம் வெட்கம் கொள்கிறது. இருப்பினும், நாம் சாதாரணமாக செல்வதன் மூலம் இங்கே நம்மால் மயில்களை பார்க்க முடிகிறது. இந்த அழகிய கிராமம், விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாக அமைய, நாட்டின் புது புறத்தில் காலடி வைத்த அனுபவத்தை அது நமக்கு தருகிறது. இக்கிராமத்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அழகானது இயற்கையோடு ஒன்றிட, அவற்றுள் மயில்களும் அடங்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Yogendra Joshi

 சூளனூர் மயில் சரணாலயம், கேரளா:

சூளனூர் மயில் சரணாலயம், கேரளா:

500 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் சூளனூர் மயில் சரணாலயம், கேரளாவின் பாலக்காடு நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. 200 துடிப்பான மயில்களுக்கு வீடாகவும் இந்த அழகிய சரணாலயம் விளங்குகிறது.

இதனை ‘மயிலதும்பரா மயில் சரணாலயம்' என்றும் அழைக்க, பறவை பிரியர்களாக நீங்கள் இருப்பின் கேரளாவின் சூளனூரை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

一元 马

Read more about: travel