Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டிக்கு என்னாச்சி? அதிர்ச்சியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்!

ஊட்டிக்கு என்னாச்சி? அதிர்ச்சியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்!

எப்படி இருந்த ஊட்டி இப்படி ஆய்டிச்சினு ஊட்டிக்கு போய்ட்டு வர்றவங்கள்லாம் வருத்தப்படுற அளவுக்கு ஆயிடிச்சி. நகரமயமாதல் ஊட்டியையும் விட்டுவைக்கல. இதனால கோடைக்காலத்துல வர்ற ஊட்டியோட வெப்பநிலை உயர்ந்துட்டே போகுதுனு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாயிருக்கு.

தமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு விரும்பி வரக்கூடிய இடம் ஊட்டி. சில்லிடவைக்கும் குளிர், சுற்றி பசுமை பொங்கும் மரங்கள், செடிகள், உயிரியல் பூங்கா, ஊட்டி ரயில், பைகாரா படகு தளம் என்று தேனிலவுக்கு உகந்த இடம் ஊட்டி.

நகரமயமாதல் தொடர்ந்து அதிகரிச்சி வந்ததால ஊட்டியோட நிலைமை இப்ப இப்படி இருக்கு.. வெப்பம் அதிகரித்து சில இடங்கள் சாதாரணமான ஊர்களைப் போலவே ஆய்டிச்சி. அதுமில்லாம பெரிய அளவுல ஊட்டிக்கு வர மக்கள் ஆர்வம் காட்டமாட்டுறாங்க இந்த சமயங்கள்ல..

இந்த ஊட்டியின் அட்டகாசமான 50 புகைப்படங்களை இந்த பதிவில் காண்போம். கனவுலகத்தின் ஊட்டியை கண்டுகளியுங்கள்.

1 ஊட்டி பெயர்

1 ஊட்டி பெயர்

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது.

2 சுற்றுலா பயணிகள்

2 சுற்றுலா பயணிகள்

இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

3 புளூ மவுண்டைன்

3 புளூ மவுண்டைன்

ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு.

Arunchaitanya Mandalapu

4 பூத்துக் குலுங்கும் குறிஞ்சிப் பூ

4 பூத்துக் குலுங்கும் குறிஞ்சிப் பூ

12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

5 யுகலிப்டஸ் புகை

5 யுகலிப்டஸ் புகை

இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

Shankaran Murugan

6 ஊட்டியின் வரலாறு

6 ஊட்டியின் வரலாறு

இப்பொழுது புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்ந்தாலும், ஊட்டியின் வரலாறு பற்றி நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. ஊட்டி ஏதேனும் ஒரு ராஜ்ஜியத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று அறிவதற்கு கூட எந்தவொரு சுவடியோ வேதாங்கமோ இல்லை.

7 தோடர் குலம்

7 தோடர் குலம்

19ம் நூற்றண்டில், கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமிப்பதற்கு முன்பு , தோடர் குலம் இங்கு வசித்தது என்னும் வரைக்குமே நம்மிடம் வரலாறு உள்ளது.

8 பிரித்தானிய ஆட்சி

8 பிரித்தானிய ஆட்சி

ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்று கூட காணலாம். ஊட்டி , இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல இருப்பதாக பல சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர்.

9 ராணி

9 ராணி

ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர், ஊட்டிக்கு 'மலைப்பிரதேசங்களின் ராணி' என்று பெயர் சூட்டினார்கள்.

10 பொக்கிஷம்

தென்னிந்தியாவின் பிற ஊர்களில் வெப்பத்தை அனுபவித்த ஆங்கிலேயர்கள், ஊட்டியைக் கண்டதும் பொக்கிஷத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தனர்.

11 வெல்லிங்டன்

மதராஸ் ரெஜிமென்டை , ஊட்டிக்கு அருகிலுள்ள வெல்லிங்டன் என்ற ஊரில் துவக்கினர். இன்று வரை வெல்லிங்டன் தான் அதன் தலைமையிடமாக உள்ளது.

12 கோடை சுற்றுலா

உடல் நிலை சரியில்லாத போர்வீரர்கள் தேறுவதற்காக வெல்லிங்டனுக்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஊட்டி கோடை வாசஸ்தலமாகப் புகழ் பெறத் துவங்கியது.

13 மதராஸ் பிரசிடன்சி

மதராஸ் பிரசிடன்சி என்ற அமைப்பின் கோடை தலைமையகமாகவும் இவ்வூர் இருந்துள்ளது.

14 பொருளாதாரம்

கிழக்கிந்திய கம்பேனி ஊட்டியை ஆக்கிரமித்தப் பின், அங்கு தேயிலை, தேக்கு, கொய்னா மருந்துச்செடி போன்றவற்றை நீலகிரி மலையில் வளரவிட்டது. இதனால் இவ்வூரின் பொருளாதாரம் குறிப்பாக விவசாயம் பெருகத் துவங்கியது.

15 முக்கிய தொழில்

ஊட்டியின் தட்ப வெட்ப நிலை விவசாய வளர்ச்சிக்கு உதவி, இன்று பெருமளவு காபி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இதுவே இன்று இவ்வூர் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது.

16 தொலைந்துபோன ஊட்டியின் வரலாறு

ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது.

17 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

நவீன உலகிற்கு, ஊட்டியின் வரலாறு ஆங்கிலேயர்கள் குடியேறிய சமயத்திலிருந்து தொடங்குகிறது.கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் வீடுகளின் கட்டுமான பாணி அனைத்தும் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது

18 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

பிரிட்டிஷ் பண்பாடும் நடைமுறைகளைகளும் உள்ளூர் மக்கள் வாழ்வில் ஆழமாக பதிந்து இருக்கிறது. உள்ளூர் உணவில் கூட ஆங்கில உணவுகளின் தாக்கம் தெரிகிறது. இதன் விளைவாக, ஊட்டியின் சிறந்த உணவில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை காணலாம்.

19 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

பிரிட்டிஷ், உள்ளூர் உழைப்பாளி மக்களுடன் சேர்ந்து செய்த வளர்ச்சிப் பணி தான், ஊட்டி இன்று புகழ் பெற உதவியது. எனவே, இன்று ஊட்டிக்கு எந்த வரலாறும் இல்லை என்றோ அல்லது இந்தியாவின் வளர்ச்சியில் அதற்கு எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை என்றோ சொன்னால், அது தவறாகும்.

20 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

21 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

22 ஊட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்

ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.

23 ஊட்டி ஏரி

ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. இந்த செயற்கை ஏரி 1824ல், 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது.

24 ஊட்டி ஏரி

மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்மட்டம் ஏரியின் அளவைக் கடந்ததால், மூன்று முறை நீர் வெளியேற்றப்பட்டது.

25 ஊட்டி ஏரி

உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக்க உதவுவதற்காக இந்த ஏரி அமைக்கப்பட்டது. பல்வேறு புவியியல் காரணங்களாலும் பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஏரிப்பூங்கா போன்றவற்றாலும் ஏரி அதன் உண்மையான அளவில் இருந்து இன்று சுருங்கி விட்டது.

26 ஊட்டி ஏரி

ஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது

27 பனிச்சரிவு ஏரி

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.

28 பனிச்சரிவு ஏரி

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.

29 பனிச்சரிவு ஏரி

சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.

30 பனிச்சரிவு ஏரி

சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

31 பொடானிக்கல் கார்டன்

பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது.

32 பொடானிக்கல் கார்டன்

இந்தப் பூங்கா 1847ல், ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கிரஹாம் மெக்இவோர் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதுவும் மாதத்திற்கு ரூ.3 கட்டணத்தில், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

33 பொடானிக்கல் கார்டன்

இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.

34 பொடானிக்கல் கார்டன்

பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

35 பொடானிக்கல் கார்டன்

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது.

36 பொடானிக்கல் கார்டன்

தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.

37 பொடானிக்கல் கார்டன்

இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

38 பொடானிக்கல் கார்டன்

வருகையை இன்னும் சுவாரசியமாக்க, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

39 பொடானிக்கல் கார்டன்

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர்.

40 பொடானிக்கல் கார்டன்

150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது.

41 ஊட்டி மலைப் பயணம்

வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும். இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர்.

42 ஊட்டி மலைப் பயணம்

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

43 ஊட்டி மலைப் பயணம்

ஊட்டியில் ஷாப்பிங் பிரபலமானது என்றாலும் எந்த சிறப்பு கைவினை பொருட்களும் இல்லாதது சில மக்களுக்கு ஏமாற்றம் தரும்.

44 ஊட்டி மலைப் பயணம்

ஷாப்பிங் ஆர்வலர்கள் ஊட்டியில் பல்வேறு பொருட்களை வாங்கலாம். இங்கு கிடைக்கும் தேயிலை மற்றும் காபி அற்புதமானது. நீங்கள் தேர்வு செய்ய பல விதங்கள் உள்ளன.

45 ஊட்டி மலைப் பயணம்

ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் வாங்காமல் வருவது ஒரு குற்றம் போன்றது. தேயிலையில் தேன், யூகலிப்டஸ், துளசி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை ஆப்பிள் மற்றும் பல வகைகள் இங்கு கிடைக்கும். வீட்டில் செய்யப்படும் சாக்லேட் கூட இங்கு கிடைக்கும்.

46 ஊட்டி மலைப் பயணம்

டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள் சாக்லேட், சுவை சாக்லேட் மற்றும் மிட்டாய்களில் இருந்து தயாராகும் சாக்லேட் போன்றவற்றை விற்கும் பல கடைகள் உள்ளன.

47 ஊட்டி மலைப் பயணம்

தோடர் பாணி பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் உள்ளன.

48 ஊட்டி மலைப் பயணம்

ஊட்டி மலைப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

49 ஊட்டி மலைப் பயணம்

ஊட்டி மலைப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

50 ஊட்டி மலைப் பயணம்

ஊட்டி மலைப் பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Read more about: travel ooty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more