Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 6 அம்மன் கோயில்கள்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 6 அம்மன் கோயில்கள்!

By Super Admin

தமிழ் நாட்டில் பல நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள்.

உங்கள் மனைவி அ காதலியுடன் இப்ப போகவேண்டிய அந்த இடங்கள்உங்கள் மனைவி அ காதலியுடன் இப்ப போகவேண்டிய அந்த இடங்கள்

இவர்களே ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் காரணம் என்று பலரும் பலமாக நம்பினார்கள். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். இப்பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.

திருப்பதி ஏழுமலையானின் ஆச்சர்யமூட்டும் மர்மங்கள்திருப்பதி ஏழுமலையானின் ஆச்சர்யமூட்டும் மர்மங்கள்

மாரியம்மன், காளியம்மன், மீனாட்சியம்மன், திரௌபதியம்மன், நாடியம்மன், செல்லியம்மன், காமாட்சியம்மன் , இசக்கியம்மன், நாகாத்தம்மன், வேம்புலியம்மன் என்று எக்கச்சக்கமான அம்மன்கள் இங்கே உண்டு.

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

வைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயில் புராதன சைவத்திருத்தலமாகும். சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். மீனாட்சியை வணங்கியபின் சுந்தரேஸ்வரரை வணங்குவது இக்கோயிலில் பின்பற்றப்படும் ஐதீக மரபாகும். மதுரையில் அவதரித்திருந்த மீனாட்சியை மணப்பதற்காக சிவபெருமான் மதுரைக்கு விஜயம் செய்ததாக புராணம் கூறுகிறது. இந்த கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார்.

காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம்

இந்தக் கோயிலின் மூலக் கடவுளான காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலில்லாமல் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இங்கு அம்மன், யோக நிலையில் அமர்ந்த வண்ணம், அமைதியும் கருணையும் கொண்டு அருள் பாலிக்கிறார். பார்வதி தேவிக்கு இந்நகரில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் இதுவாகும். இக்கோயில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னர்களால், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோயில்

சமயபுரம் மாரியம்மன் கோயில்

திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜை நடைபெறுவதால் கூட்டம் அலைமோதுகிறது. அரிசி மாவு, நெய், பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் "மாவிளக்கு மாவு" தான் இங்கு முக்கிய காணிக்கையாகக் கருதப்படுகிறது. இங்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் "மலர்ச்சொறிதல்" என்ற பெயரில் விமரிசையாக மலர் திருவிழா நடத்தப்படுகிறது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. அப்போதைய தஞ்சாவூர் மகாராஜாவான சத்ரபதி வெங்கோஜியின் கனவில் மாரியம்மன் வந்து தான் தஞ்சாவூரிலிருந்து சில மைல் தொலைவிலுள்ள புன்னை மரக் காட்டின் நடுவே சிலை வடிவில் இருப்பதாகவும், தனக்கு அங்கே ஒரு கோவில் கட்டுமாறும் கூறினாராம். மகாராஜா அங்கு சென்று பார்த்தபொழுது மாரியம்மனின் சிலையைக் கண்டாராம். உடனே அதே இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி அச்சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார் என்று சொல்லப்படுகிறது.

மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி

மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரார்த்தனைகளை சுமார் மூன்று வாரங்களுக்குள் மாசாணியம்மன் நிறைவேற்றிவிடுவாள் என்று நம்பப்படுவதால் இங்கு பக்தர்கள் கூட்டம் எப்போதும் ஜேஜேவேன்றுதான் இருக்கும். மாசாணியம்மன் கோயில், "நானன்" என்ற மன்னனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து மாம்பழம் ஒன்றை பறித்துத் தின்ற ஒரு பெண்ணின் பெயரில் அமைக்கப்பட்ட கோயில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணின் செயலைக் கண்டு கோபமுற்ற மன்னன் அவளுக்கு மரண தண்டனை விதித்தான். பின்னாளில் "மாசாணி" என்ற பெயரில் உள்ளூர்வாசிகள் அப்பெண்ணை வழிபட ஆரம்பித்தார்கள்.

பண்ணாரி மாரியம்மன் கோயில்

பண்ணாரி மாரியம்மன் கோயில்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி எனும் ஊரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு விபூதிக்கு பதிலாக புற்று மண்தான் பிரசாதமாக தரப்படுகிறது.

Read more about: கோயில்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X