» »தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!

Posted By: Bala Karthik

தென்னிந்தியப் பகுதியில் எழில்மிகுந்த காட்சியை தரும் ஆலயங்களும், கோட்டைகளும், அழகிய நினைவு சின்னங்களும் ஏராளமாக காணப்பட, இந்த நிலத்தை ஆண்ட பல சக்திவாய்ந்த வம்சாவளியினரும் காணப்பட்டனர். தென்னிந்தியாவில் கலாச்சார ரீதியாக ஆன்மீக நோக்கத்தில் வெவ்வேறு விதத்தில் விழாக்களானது கொண்டாடப்படுகிறது.

அவற்றுள் சில விழாக்கள் குறிப்பிட்ட பகுதியில் பிரசித்திப்பெற்று விளங்க, பிற விழாக்களான மைசூரு., தசராவை ஆடம்பரமாக கொண்டாடுவதோடு இவ்விடமானது கிட்டத்தட்ட ஒத்த நிலையிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் காணப்படும் முக்கியமான ஆறு இடங்களை பற்றி நாம் மேலும் தெரிந்துக்கொள்ளலாம்.

மைசூரு தசரா:

மைசூரு தசரா:


அழகிய அரண்மனையை தவிர்த்து மைசூரில் என்ன நாம் பார்ப்பது? என யோசித்தால், மாபெரும் மைசூரு தசரா திருவிழா நான் இருக்கிறேன் என நம்மை வரவேற்பதோடு, வருடந்தோரும் செப்டம்பர் அல்லது அக்டோபரிலும் நிகழ்கிறது. இந்த ஒன்பது நாட்கள் நீண்ட திருவிழாவானது நூற்றாண்டுகளை கடந்து தொடர, வழக்கமாக இருபது நிகழ்வுகளையும் இது கொண்டிருக்கிறது.

சாமுண்டீஸ்வரி தேவி சிலையின் ஊர்வலம் வர அதனை யானை சவாரி என நாம் அழைப்பதோடு, மைசூரு அரண்மனையில் 100,000 விளக்குகளுக்கு மேலே காணப்படுவதோடு, இந்த அரண்மனைக்கு எதிரில் மிகவும் முக்கிய ஈர்ப்பாக இந்த பெரும் திருவிழாவும் அமைகிறது.

PC: Ananth BS

ஹம்பி உட்சவம்:

ஹம்பி உட்சவம்:

இந்த ஹம்பி திருவிழாவை ஹம்பி உட்சவம் அல்லது விஜய உட்சவம் என அழைக்க, மூன்று நாட்கள் நீண்டு மூர்க்கத்தனமான திருவிழாவாகவும் ஒவ்வொரு வருடமும் அமைந்திட, விஜய நகர பேரரசின் ஆளுமையும் காணப்படுகிறது. இந்த கண்கொள்ளா காட்சியான கலாச்சார நிகழ்வுகளானது இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களின் திறமையை உணர்த்துகிறது.

கலாச்சார இசை, கலை மற்றும் நடனம் ஆகியவை ஆடம்பரமாக அமைகிறது. அவற்றுள் சிறந்த ஒரு நிகழ்வாக ஒளி மற்றும் ஒலி நிகழ்வானது அமைய, ஹம்பி இடிபாடுகள் சிறப்பான ஒளியில் தென்படுவதோடு, பதினைந்து கிலோமீட்டர் பரந்து விரிந்தும் காணப்படுகிறது.

இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

PC: vilapicina

ஓணம்:

ஓணம்:


கேரளாவில் தொடங்கிய ஓனம் ஒரு இந்து பண்டிகை ஆகும். நெல் அறுவடை திருவிழாவாக இதனை கொண்டாடப்பட, வாமண அவதாரமான விஷ்ணு பெருமான் மற்றும் மகாபலி பேரரசருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மலையாள இந்துக்களுக்கு மாபெரும் விழாவாக இது அமைய, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் இது கொண்டாடப்படுகிறது.

இந்த ஓன திருவிழாவின் அங்கமாக பல நிகழ்வுகளும் காணப்பட, அவற்றுள் புலிக்காளி (புலி ஆட்டம்), ஓனத்தள்ளு (தற்காப்பு கலை), ஓனவில்லு (இசை), அல்லது அழகிய மலர் அணிவகுப்பு ஆன பூக்கல்லம் எனவும் காணப்படுகிறது. படகு போட்டி அல்லது வல்லம் காளி இந்த நேரத்தில் நடைபெறுகிறது.

Pc: Unni Nalanchira

நாட்டியாஞ்சலி நடன திருவிழா:

நாட்டியாஞ்சலி நடன திருவிழா:


கலையும், நடனமும் ஒருங்கிணைந்ததாக ஆன்மீகம் கொண்டு காணப்பட, நடராஜ பெருமானுக்காக நாட்டியாஞ்சலி நடன திருவிழாவானது நடத்தப்பட, இது சிவபெருமானின் சித்தரிப்பாகவும் காணப்படுகிறது. இது ஐந்து நாட்கள் திருவிழாவாக அமைய, மஹா சிவராத்திரியின் போது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள பல கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக்கொள்வதோடு பெரும் தொடர்புடன் காணப்பட, ஒவ்வொரு வருடமும் சிறந்த நடனங்களும் அரங்கேறிடக்கூடும்.

PC: amazingarfa

பொங்கல்:

பொங்கல்:

தமிழ்நாட்டின் அறுவடை திருவிழாவான பொங்கல், ஜனவரி பதினான்கு அல்லது பதினைந்தில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் மற்ற பகுதிகளில் மஹரா சங்கராந்தி எனவும், தமிழ்நாட்டில் பொங்கல் என்னும் பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த முக்கியமான இந்து திருவிழா, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செயல்களுடன் காணப்படுகிறது.

பயிர்களான கரும்பு, மஞ்சள், மற்றும் தானியங்கள் அறுவடையானது இந்த பருவத்தில் நடைபெற, இந்த தானியங்களை தமக்களித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் இந்த பொங்கல் திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.

PC: Ramkrishna Math

திரிசூர் பூரம்:

திரிசூர் பூரம்:

கேரளாவின் வருடந்தோரும் கொண்டாடும் திருவிழாவான திரிசூரின் வடக்குநாதன் ஆலயம், பூர நட்சத்திரத்தின்போது நிலா தோன்றும்போது கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா, கேரளாவின் கலாச்சாரத்தை அழகுப்படுத்தப்படும் யானைகள், பட்டாசுகள், மதிமயக்கும் சிறுகுடைகள், தட்டல் இசை என காணப்படுகிறது.

ஏப்ரல் அல்லது மே மாதங்களில், ராஜ ராம வர்மனால் ஆரம்பிக்கப்படும் திருச்சூர் பூரம், 1700ஆம் ஆண்டு கொச்சி அரசனால் தொடங்கப்பட்டதாகும். 250 கலைஞர்களை கொண்டு இளஞ்சித்திர மேளமானது மதிமயக்கும் இசை நிகழ்வைக்கொண்டு மனதை இதமாக்கிட, இந்த கருவியின் பெயர் சண்டா என்றும், நட்சத்திரங்களின் பார்வையிலும் இது காணப்படுகிறது.

PC: Shankar S.

Read more about: travel