» »இந்தியாவின் மிகச்சிறந்த 7 ரயில் பயணங்கள் இவைதான் தெரியுமா?

இந்தியாவின் மிகச்சிறந்த 7 ரயில் பயணங்கள் இவைதான் தெரியுமா?

Posted By: Udhaya

ரயில் பயணம் என்றாலே, உள்ளுக்குள் ஏதோ குதூகலிக்கும் உணர்வு.. மகிழுந்து கார், பேருந்து பஸ் என்று எதில் சென்றாலும் தொடர்வண்டி ரயில் யில் செல்லும் அனுபவமே தனி.

சடக் சடக்.. கட கட.. என ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்ப ரயிலின் சத்தத்தை மாறுபடுத்தி அனுபவிப்பார்கள்.

ரயில் பயணம் நம்மில் பலருக்கும் அன்றாட வாடிக்கையாக இருக்கும்.

முக்கியமாக சென்னை வாசிகளுக்கு, கூட்டநெரிசலில் ஏறி, இறங்கி, சரியான நேரத்துக்கு அலுவலகம், பள்ளி கல்லூரியை அடையவேண்டுமே என்று படு சுட்டியாக செல்வீர்கள். ரயில் உங்களுக்கு சுறுசுறுப்பைக் கற்றுத் தருகிறது.

தமிழகத்தின் தற்போதைய நிலை போல எப்பவும் உங்களை பரபரப்பாக வைத்துக்கொள்ளும் ரயில் பயணத்துக்கு பழகிய நீங்கள், ரயிலில் ஒரு சிறப்பான சுற்றுலா சென்றால் எப்படி இருக்கும்.

அதுவும் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் அன்பு அரவணைக்க பேசி மகிழ்ந்து சென்றால்,.... ரயில் பயணம் வாழ்வின் பசுமையான நிகழ்வுகளை அனுபவிப்போம் வாங்க!

கல்காவிலிருந்து சிம்லா ரயில் பயணம்

கல்காவிலிருந்து சிம்லா ரயில் பயணம்

சிவாலிக்ஸ் வழியாக செல்லும்போது வரும் ஆனந்தமே தனி. கல்கா முதல் சிம்லா வரை செல்லும் ரயில் பயணத்தில் ரயிலின் சன்னலை அப்படியே திறந்து விட்டு வீசும் குளிர் காற்றில்

நம்மை மறந்து ஏஆர் ரஹ்மான் பாடலைக் கேட்டுக்கொண்டே செல்வோம் வாங்க....

PC: Raghavan V

கொங்கன் ரயில் பயணம்

கொங்கன் ரயில் பயணம்

ரத்னகிரி - மடோகான் - ஹன்னோவர் - மங்களூர் வழித்தடத்தில் ரயில் பயணம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே அலாதிப் பிரியமாகும்.

குகைகள், ஆற்றுப்பாலங்கள் என அனைத்தையும் கடந்து ஏரி வழியாக செல்லும்போது மனம் சிலாகித்துவிடும்.

PC: Amey Hegde

ஊட்டி மலை ரயில் பயணம்

ஊட்டி மலை ரயில் பயணம்

மலைகளின் இளவரசியைக் காண ஓடோடி செல்ல பேருந்து பயணத்தை விட இன்பமான ஒரு பயணம் இந்த ரயில் பயணம்.

PC: Enchant_me

டார்ஜிலிங் ரயில் பயணம்

டார்ஜிலிங் ரயில் பயணம்

இந்தியாவின் மிகப் பழமையான ரயில் பயணம் இது.

கஞ்சன்சுங்கா மலைத்தடங்களினூடே செல்லும் இந்த மலை ரயில் பயணத்தில் அலாதியான அம்சங்கள் நிறைந்திருக்கும்.

பார்க்க பார்க்க பரவசமூட்டும் நிகழ்வுகள் மலைகளெங்கும் நிறைந்திருக்கும்.

PC: wiki

ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சல்மர் பயணம்

ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சல்மர் பயணம்

பாலைவன ராணி ரயில் பயணம் தார் பாலைவனம் வழியாக போகும். பாலைவனம் மணற்பாங்கான பகுதிகளில் பறக்கும் ரயில் சூப்பராக இருக்கும்.

ராமேஸ்வரத்துக்கு ரயில் பயணம்

ராமேஸ்வரத்துக்கு ரயில் பயணம்

புண்ணிய பூமியான ராமேஸ்வரத்துக்கு கடல் வழியே ஒரு ரயில் பயணம்.


PC: Kamalbadri

கவுகாத்தியிலிருந்து சில்சார் பயணம்

கவுகாத்தியிலிருந்து சில்சார் பயணம்

இந்தியாவின் மிகச்சிறந்த ரயில் தடங்களுள் ஒன்றான இது ரயில் செல்லும் பாதைகளின் இருபுறமும் பச்சை பசேலென்ற காட்சிகளை வளர்த்து நிக்கும்.

இருந்தாலும் இது மிகவும் அபாயமான ரயில் பயணங்களுள் ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

PC: Abhinav

Read more about: travel பயணம்