Search
  • Follow NativePlanet
Share
» »7 நகரங்கள், 36 மணி நேரத்தில் 5300 கிமீ பயணம் – பிரதமர் மோடியின் பயணத்திட்டம் தெரியுமா?

7 நகரங்கள், 36 மணி நேரத்தில் 5300 கிமீ பயணம் – பிரதமர் மோடியின் பயணத்திட்டம் தெரியுமா?

இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த இரண்டு நாளில் 36 மணி நேரத்தில் 5300 கிமீ பயணம் செய்து 7 நகரங்களுக்கு சென்று பல திட்டங்களுக்கு தலைமை தாங்கியும், அடிக்கல் நாட்டியும் உள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய இந்த பயணம் வாயிலாக அவர் பல மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.

செய்தி நிறுவனமான PTI, பிரதமர் மோடியின் பயணத்திட்டத்தை நன்கு அறிந்த அதிகாரியை மேற்கோள் காட்டி, "பரபரப்பான அட்டவணையில் பிரதமர் சுமார் 5,300 கிமீ தூரம் வான்வழிப் பயணம் செய்வதைக் காணலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்த பரபரப்பான அட்டவணையில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போமா?

pmocover

ஏப்ரல் 24 அன்று தொடங்கிய இரண்டு நாள் பயணம்

முதல் நாளான ஏப்ரல் 24 அன்று பிரதமர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். அதிகாரிகள் பகிர்ந்து கொண்டபடி, அவரது பயணம் ஏப்ரல் 24 அதிகாலையிலேயே தொடங்கியுள்ளது. அங்கிருந்து ரேவா நோக்கி சென்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடுத்ததாக மத்திய பிரதேசத்திற்கு தெற்கிலே அமைந்துள்ள கேரளாவின் கொச்சிக்கு செல்வதற்காக மோடி ஜி மீண்டும் கஜுராஹோவுக்குத் திரும்பினார். இந்தப் பயணத்திலேயே அவர் 1700 கிமீ தூரத்தை கடந்து விட்டார்.

யுவம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றுள்ளார். இந்த நகரங்களில் உள்ள இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தும் அவரது நாள் 1 பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

pmo

2வது நாளில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்

இந்த 2 நாள் பயணத்தின் 2வது நாள் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்தில் தொடங்கியது. கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து திறந்து வைப்பதற்காக அவர் திருவனந்தபுரத்திற்கு சென்றார். இந்த ரயில் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் இயக்கப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.

மேலும், அவரது பயணத்திட்டத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் சில திட்டங்களும் அடங்கியது. மீண்டும் கொச்சிக்கு விஜயம் செய்த போது, நாட்டின் முதன் முதல் வாட்டர் மெட்ரோவையும் திறந்து வைத்தார்.

pmo travel

நாட்டுக்காக அர்பணிக்கப்பட்ட கல்வி நிறுவனம்

கேரளாவில் அனைத்து நிகழ்வுகளும் முடிந்த பின்னர், கேரளாவிலிருந்து, அவர் நேராக சூரத் வழியாக சில்வாசாவுக்குச் சென்றார். அங்கு நமோ மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இங்கு சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவரது அடுத்த இலக்கு டாமன் ஆகும், அங்கு அவர் தேவ்கா கடற்பகுதியை திறந்து வைத்தார். அதன் பிறகு, அவர் விமானம் மூலம் சூரத் சென்று, பின்னர் மீண்டும் டெல்லி செல்கிறார்.

மொத்தமா இரண்டே நாளில் 5600 கிமீ தூரத்தை பயணத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+