Search
  • Follow NativePlanet
Share
» »இனி ஊட்டி, கொடைக்கானல் வேணாம்...தமிழ்நாட்டில் குறைந்த செலவில் பார்க்க இத்தனை மலை பிரதசங்கள் இருக்கே

இனி ஊட்டி, கொடைக்கானல் வேணாம்...தமிழ்நாட்டில் குறைந்த செலவில் பார்க்க இத்தனை மலை பிரதசங்கள் இருக்கே

தமிழ்நாட்டில் மலை பிரதேசங்கள் என்றாலே ஊட்டி, கொடைக்கானல் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அங்கு கூட்டமாகவும், செலவு அதிகமாகவும் ஆகும் என பலர் யோசிப்பது உண்டு. இந்த தயக்கம் உங்களுக்கும் இருந்தால் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் சுற்றி பார்க்க நீங்கள் இந்த 7 இடங்களை தேர்வு செய்யலாம்.

Yellagiri

1. ஏலகிரி மலை

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மலைப்பகுதி ஆகும். அதிகமான கூட்டம் இல்லாமல், இயற்கையின் செழுமையை உணர முடியுமென்றால் அது ஏலகிரி மலை தான். இதற்கு "ஏழுமலை" என்று ஒரு பழைய பெயரும் உள்ளது. ஏனெனில் இது 14 சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ள மலைத்தொடர் ஆகும்.இங்கு பசுமையான மரங்கள் மற்றும் அழகான தோட்டங்கள் கொண்ட இயற்கை பூங்கா(நேச்சர் பார்க்), பழங்குடியினர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு தொன்மையான குகை(கரடி குகை), சுவாமிமலை ஏரி, புங்கனூர் ஏரி மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிகள் போன்ற பல இடங்கள் உள்ளன.

2. கொல்லி மலை

நாமக்கல் மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக 1300 மீட்டர் (4265 அடி) உயரத்தில் அமைந்துள்ளது கொல்லி மலை. கொல்லி மலையின் பெயருக்குப் பின்னால் ஒரு சிறப்பு வரலாறு உள்ளது. பழங்கால சங்க இலக்கியங்களிலும், தொன்மையான கதைகளிலும் இது "மரண மலையாக" குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கொல்லி மலை ஒரு அழகான சுற்றுலா தளமாகவும், பசுமை நிறைந்த இயற்கை ரீதியான விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இந்த மலை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இங்கு 1000 படிகள் கீழே இறங்கி சென்று ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காணலாம். அரப்பலீஸ்வரர் கோவில், சித்தர் குகைகள் போன்ற தனித்துவமான இடங்களை கொண்டுள்ளது. இது மூலிகை மருத்துவம், தொன்மையான சிவன் கோவில்கள், பழங்குடியினர் வாழ்வியல், மற்றும் மிகவும் இயற்கை மாறாத அழகு ஆகியவற்றிற்காக பிரபலமாக உள்ளது.

Hill Station

3.சிறுமலை மலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் அழகிய மலைப்பகுதிகளில் ஒன்றாக விளங்கும் சிறுமலை மலைகள் பலரும் அறியப்படாத மலைப்பகுதியாகும். 1600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலையின் பசுமையான சூழல் வருடம் முழுவதும் மிதமான மற்றும் குளிர்ச்சியான காலநிலை கொண்டது.சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய சிறிய ஏரி, முருகன் கோவில்,இங்கு விளையும் மலை வாழைப்பழங்கள் மிகவும் பிரபலம் ஆகும். ஆரோக்கியமான காலநிலை மற்றும் அதிக கூட்டம் இல்லாமல், இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாகும்.

4.மேகமலை

"மேகக்கொட்டகை மலை" என்று அழைக்கப்படும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பான, ஆனால் பலரும் அறியாத, 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி மேகமலை ஆகும். இதன் பசுமையான தேயிலை தோட்டங்கள், அருவிகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு,வருடம் முழுவதும் மழை கலந்த குளிர்ச்சியான காலநிலை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. மலைகளால் சூழப்பட்ட அழகிய நீர்தேக்கம் மற்றும் மூடுபனி சூழ்ந்த மலைகளில் ஒரு அமைதியான விடுமுறைக்கு அதிக கூட்டம் இல்லாமல், இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாகும்.

5.ஆனைமலை மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் அமைந்துள்ள அழகிய மலைத்தொடர் ஆனைமலை மலைகள். இது "யானை மலை" எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு அதிகளவில் யானைகள் காணப்படுகின்றன. இந்த மலையில் பல்வேறு அருவிகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், யானைகள், புலிகள், கரடி, மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகளைப் பார்க்க சிறந்த இடமாகும். மேலும் வால்பாறை, அத்திரப்பள்ளி அருவி, சோலையார் அணை, தாமரைக்குளம் மற்றும் நல்லமுடி வியூ பாயிண்ட் போன்ற இயற்கை எழில் நிறைந்த இடங்களும் காணப்படுகிறது.

6.கல்வராயன் மலைகள்:

கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பரவியுள்ள பலரும் அறியப்படாத, ஆனால் அற்புதமான மலைத்தொடராகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மலை, இயற்கை ஆர்வலர்களுக்கும், அமைதியான சூழலை தேடுபவர்களுக்கும் சிறந்த இடமாகும். சேர்வராயன் மற்றும் கல்வராயன் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மலை நீண்ட வனப்பகுதிகள், அருவிகள் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல் கலந்த சுற்றுச்சூழலால் தனித்துவம் பெற்றுள்ளது. மேலும் இங்கு செங்கல்தேரி நீர்வீழ்ச்சி மற்றும் திருக்கோணமலை கோயில் போன்ற அற்புதமான இடங்களைக் கொண்டுள்ளது.

7.பச்சமலை மலைகள்:

திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள அழகிய, ஆனால் பலரும் அறியப்படாத,மலைத்தொடராகும். இதன் பெயருக்கேற்ப, இந்த பச்சமலை முழுவதும் பசுமையாக திகழ்கின்றது.இங்கு ஆரஞ்சு தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள், ஓம் கரையர் நீர்வீழ்ச்சி, மங்கலம் அணை மற்றும் பழமையான செட்டிகுளம் கோயில் ஆகியவையும் உள்ளன.இயற்கை செழிப்பும், பழங்குடியினர் வாழ்வியல் கலந்த அமைப்பும், இது ஒரு தனித்துவமான சுற்றுலா இடமாக திகழ்கிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+