Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் நீங்கள் மிஸ் பண்ணிடக் கூடாத 8 அற்புத வேலைபாடு நிறைந்த அரண்மனைகள் !!

இந்தியாவில் நீங்கள் மிஸ் பண்ணிடக் கூடாத 8 அற்புத வேலைபாடு நிறைந்த அரண்மனைகள் !!

By Bala Karthik

இந்தியாவில் பலவிதமான மாபெரும், செல்வாக்கு, சக்திவாய்ந்த வம்சங்கள் காணப்பட, இந்த கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தற்போதைய உலகிலும் பல வழிகளில் நாம் பேணிப்பாதுகாத்து வருகிறோம். அப்பேற்ப்பட்ட ஆளுமை மற்றும் நாட்டு இருப்பின் உன்னதமான எடுத்துக்காட்டாக, பீடங்கள் முதலியன நினைவிடங்கள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகியவற்றில் காணப்பட, அவற்றை நாம் பாதுகாத்து வர, தற்போது வரை வரலாற்றின் பக்கங்களை கண்டு நமது மனமானது அதிர்ஷ்டத்தின் பெருமை எனவும் நினைத்துக்கொள்ளக்கூடும்.

பல்வேறு வம்சத்தின் அரச குடும்பத்து வசிப்பிடங்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்பட அவை இன்றைய நிலையில் சுற்றுலா தளமாகவும் காணப்படுகிறது. இந்த அரண்மனைகள் இன்று நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவர, கடந்து வந்த காலத்தின் பார்வையையும் பார்த்திடக்கூடும். அவ்வாறு இந்தியாவில் காணப்படும் 8 எழுத்துபிழை - பிணைப்பு அரண்மனைகளையும், அவை வரலாற்று ஆர்வலர்களின் மனதை எப்படி சுண்டி இழுக்கிறது? என்பதையும் நாம் இப்போது பார்க்கலாம்.

 மைசூரு அரண்மனை:

மைசூரு அரண்மனை:

பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தோ - சர்கானிக் பாணியாக அமையும் மைசூரு அரண்மனையை ‘அம்பா விலாஸ் அரண்மனை' எனவும் அழைக்கப்பட, கர்நாடகாவின் மைசூரு நகரமானது பெரும் சுற்றுலா ஈர்ப்பையும் கொண்டிருக்கிறது. இந்த கண்கொள்ளா காட்சியை தரும் அரண்மனையானது, 1399லிருந்து 1950வரை வாடியார் வம்சத்தின் ராஜ வசிப்பிடமாகவும் இருந்து வந்தது.

தசராவின்போது, இந்த அரச குடும்பத்து அரண்மனையானது 100,000 பல்புகளால் ஜொலிக்க, இந்த ஒன்பது நாட்கள் திருவிழாவின் மாலைப்பொழுதில் கண் கொள்ளா காட்சியை கருவிழிகளுக்கு பரிசாக தந்து மனதையும் இதமாக்குகிறது. சுற்றுலா பார்வையாளர்களுக்கான அற்புத நேரமாக காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து நாளும் அமைய, பலரும் வந்து பார்த்து செல்கின்றனர்.

மெஹ்ரன்கார்ஹ் கோட்டை:

மெஹ்ரன்கார்ஹ் கோட்டை:

ராஜஸ்தானின் நீல நகரமான ஜோத்பூரில் காணப்படும் உயரமான மெஹ்ரன்கார்ஹ் கோட்டை அழகிய நகரத்தின் மகுடமாக விளங்குகிறது. ராவோ ஜோதாவால் இது கட்டப்பட, இவர் தான் 1460ஆம் ஆண்டின் ரத்தோர் குடும்பத்தின் தலைமை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டையின் உள்ளே, பல பெருமைமிக்க கட்டிடங்களான மோத்தி மஹால், பூல் மஹால் மற்றும் அருங்காட்சியகம் காணப்பட, அழகிய அரசக்குடும்பத்து பல்லக்குகள், இசைக்கருவிகள், ஓவியங்கள் ஆகிய பலவற்றிற்கும் வீடாகவும் இவ்விடம் விளங்குகிறது.

PC: Jmacleantaylor

 ஹவா மஹால்:

ஹவா மஹால்:

இலக்கியரீதியாக இதனை ‘காற்றின் அரண்மனை' என அழைக்க, ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் கட்டப்பட்டிருக்கும் நெகிழ்ச்சியடைய செய்யும் அரண்மனைதான் இதுவும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற மணல் கற்களைக்கொண்டு இது கட்டப்பட்டிருக்க, இந்த அரண்மனையின் நோக்கமாக இந்த அரண்மனையில் வாழும் பெண்களால் இந்த தெருவில் நடக்கப்படும் விழாவை காண அனுமதிக்கவும் வேண்டுமாம்.

போபால் சிங்கினால் கட்டப்பட்ட கேத்ரி மஹாலில் காணப்படும் ஓவிய ஈர்ப்பினாலும் இது கட்டப்பட்டும் காணப்பட, 1799ஆம் ஆண்டு மகாராஜ சவாய் ப்ரதாப் சிங்கால் இது கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவ்விடமானது ஐம்பது அடி பிரமிட் வடிவ நினைவு சின்னமாக ராஜ்புட் மற்றும் முகலாய கட்டிடக்கலையை கொண்டு காணப்பட, அது நம்மை வியப்பின் எல்லையிலும் பயணிக்க வைத்திடக்கூடும்.

PC: Aarshi Joshi

குவாலியர் கோட்டை:

குவாலியர் கோட்டை:

இந்த எட்டாம் நூற்றாண்டு மலைக்கோட்டையானது மன் சிங்க் டோமரால் கட்டப்பட்டதாகும். இவ்விடமானது இரண்டு மாபெரும் அரண்மனைகளான குஜாரி மஹால் மற்றும் மன் மந்தீரையும் கொண்டிருக்க, இதுதான் இந்த கோட்டைகளின் அரணாகவும் அமைகிறது. இராணிகளுக்கு சம்பந்தப்பட்ட குஜரி மஹால், தற்போது தொல்லியல் அருங்காட்சியகமாக காணப்படுகிறது.

சந்தேகத்திற்கு இடமற்ற இந்த கோட்டை மத்திய பிரதேசத்தின் குவாலியரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாகவும் அமைகிறது. இவ்விடமானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க, பெரியவர்களுக்கு 75 ரூபாயும், குழந்தைகளுக்கு 40 ரூபாயும் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

PC: Kmohankar

கூச் பேஹர் அரண்மனை:

கூச் பேஹர் அரண்மனை:

இலண்டனின் உலக புகழ்பெற்ற பக்கிங்கம் அரண்மனைக்கு அப்புறம் முக்கிய ஈர்ப்பாக அமையும் கூச் பேஹர் அரண்மனை மேற்கு வங்கத்தில் காணப்படுகிறது. இவ்விடமானது மேற்கு பாணி கட்டிடக்கலையில் காணப்பட, உன்னதமான எடுத்துக்காட்டாகவும் விளங்குவதால், செங்கற்களை கொண்டும் இது கட்டப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்கு கட்டிடமானது 51,000 சதுர அடியில் பரந்து விரிந்து காணப்பட, பல்வேறு அறைகளையும் என பில்லியர்ட் ஹால், சமையல் அறை, ட்ரெஸ்ஸிங்க் அறை என பலவும் காணப்படுகிறது. அருங்காட்சிகமும், அழகிய ஓவியமென நம்மை கடந்த காலத்தை நோக்கி பயணிக்க வைத்திடவும் கூடும்.

PC: Bornav27may

உதய்பூரின் நகரத்து அரண்மனை:

உதய்பூரின் நகரத்து அரண்மனை:

பிச்சோலாவின் அழகிய ஏரியானது கிழக்கு கரையினை தழுவிக்காணப்பட, உதய்பூரின் நகரத்து அரண்மனையையும் இங்கே கொண்டிருக்கிறது. இந்த அமைப்பானது முடிக்கப்பட 400 வருடங்கள் ஆக, மேவர் வம்சத்தின் பல ஆட்சியாளர்களின் பங்களிப்பும் காணப்படக்கூடும்.

ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணியில் இது கட்டப்பட்டிருக்க, உதய்பூரின் நகரத்து அரண்மனையை சுழ்ந்து பல பிற கண்கொள்ளா காட்சி தரும் அரண்மனைகளும் காணப்பட, அவற்றுள் சில பிச்சோலா அரண்மனையிலும் காணப்படுகிறது. இந்த அரண்மனையானது சுற்றுலா பயணிகளுக்காக காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை திறந்தும் காணப்படுகிறது.

PC: Dennis Jarvis

உமைத் பவன் அரண்மனை:

உமைத் பவன் அரண்மனை:

உலகில் காணும் பெரிய தனியார் வசிப்பிடங்களுள் ஒன்றான இவ்விடம், தாஜ் குழுவின் ஹோட்டல்களையும் ஒரு பிரிவில் கொண்டிருக்கிறது. இதனை முன்னர், ‘சித்தார் அரண்மனை' என அழைக்க, இந்த அரண்மனையானது 1943ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அரண்மனையானது ஜோத்பூரின் வறுமையினால் வாடியவர்களுக்கு பணி தர கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் ஒரு அங்கத்தை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. அற்புதமான கட்டிடக்கலைக்கொண்ட உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூரில் நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் மதிக்கத்தக்கதாகவும் அமைகிறது.

PC: Deepak Bansi

ஜோதாபாய் அரண்மனை:

ஜோதாபாய் அரண்மனை:

முகலாய வம்சத்தின் அழகிய தலை நகரமான பத்தேஹ்பூர் சிக்கிரி, நாம் தவிர்த்திடக்கூடாத பல ஈர்க்கப்படும் நினைவு சின்னங்களுக்கு வீடாகவும் விளங்க, ஆக்ராவை காண வரும் நாம் இதனையும் கண்டிட வேண்டும். முகலாய கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை அதீதமாக காணப்படும் இவ்விடம், அரண்மனைகள், கோட்டைகள், மற்றும் மசூதிகளையும் பிரதிபலித்துக்கொண்டு இந்த புகழ்பெற்ற நகரத்தில் காணப்படுகிறது.

மாபெரும் அமைப்புகளை கொண்ட இடங்களுள் ஒன்றாக ஜோதாபாய் அரண்மனையும் காணப்பட, இந்த அரண்மனையில் கால் பங்கினை அன்புக்கொண்ட முகலாய இராணிக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்க, அதோடு இணைந்து மற்ற பெண்களான அக்பர் ஹரீமுக்கும் காணப்படுகிறது.

PC: Pratyusha chokkasamudra

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more