» »உங்களை ஒரே இரவில் உலக கோடீஸ்வரராக மாற்றும் உண்மைப் புதையல்கள்!

உங்களை ஒரே இரவில் உலக கோடீஸ்வரராக மாற்றும் உண்மைப் புதையல்கள்!

Written By: Udhaya

இந்தியா புதையல்கள் நிறைந்த நாடு என்பது நம் பலருக்கும் தெரிந்திராத விசயமாகத்தான் இருக்கும். இயற்கை வளங்களும், அரிய ஆற்றல்களும் மிக்க இந்தியாவில் இன்னமும் புதையல்களைத் தேடி பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா. அது ஒருபுறமிருக்கட்டும். இந்த இடங்களில் இருக்கும் புதையல்கள் மட்டும் உங்களுக்கு கிடைத்தால், உலகின் மிகப் பெரிய பணக்காரராக நீங்கள் மாறும் வாய்ப்பிருக்கிறது தெரியுமா? வாருங்கள் அவை எங்கிருக்கின்றன என்பதைக் காண்போம்.

சார்மினார்

சார்மினார்


400 வருடங்களுக்கும் மேல் பழமையான ஒரு சரித்திர புகழ் வாய்ந்த இடம் இதுவாகும்.

அழகிய கட்டிடக்கலைகளைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. இது ஐதராபாத் மாநகரத்தின் நடுவில் அமைந்துள்ளது மேலும் சிறப்பானதாகும். சொல்லப்போனால் இந்த நகரம் இந்த சார்மினார் கோட்டையை மையமாக்கொண்டுதான் கட்டப்பட திட்டமிடப்பட்டது.

இந்த இடத்தில் இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கின்றன. ஒன்று வடக்கு தெற்காகவும், மற்றொன்று மேற்கு கிழக்காகவும் செல்கிறது.
PC:Matteo Ianeselli

சார்மினார் சுரங்கம்

சார்மினார் சுரங்கம்

வாலைப் பிடித்துச் செல்வதுபோல் சில ஆண்டுகள் பின் செல்ல, ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது இது உண்மைக் கதை. இந்த சார்மினாரில் காணப்படும் ஒரு கோட்டை சுரங்கம் அப்படியே உங்களை கோல்கொண்டா கோட்டைக்கு கொண்டு செல்லுமாம்.

இரண்டு இடங்களுக்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் இருக்கிறது

கிங் கோத்தி மாளிகை

கிங் கோத்தி மாளிகை


முகலாய மன்னர்களின் கட்டிடக்கலை மிகவும் சிறப்பானதாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு ஒப்பானதாகவும் இருக்கிறது. இவர்கள் அரண்மனைகளை மிகவும் அதிக பொருட்செலவில் கட்டிமுடிப்பார்கள். அரண்மனைகளின் ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள் என்று நாம் படித்திருக்கிறோம் அல்லவா. அப்படி அழகின் உருவாய் அமைந்துள்ளதுதான் இந்த கிங்கோத்தி அரண்மனை. இது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது.

PC:Sarvagyana guru

எப்படி செல்வது

எப்படி செல்வது


தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தின் காச்சிகுடா ரயில் நிலையத்திலிருந்து வெகு அருகில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இது ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ வரை தூரம் கொண்டது. மேலும், இங்கு செல்ல 10 நிமிடங்கள் கூட ஆகாது. காச்சிகுடா ரயில் நிலைய சாலையிலிருந்து நாராயணகுடா சாலையைப் பிடித்து, அங்கிருந்து, கிங்கோத்தி சாலையை அடையலாம். இந்த சாலையில் முடிவில் அமைந்துள்ளது இந்த அரண்மனை.
PC: Wikipedia

மாளிகை காதல்

மாளிகை காதல்


இந்த மாளிகையை கமல் கான் என்னும் செல்வந்தர்தான் கட்டினார். இதன் அழகைப் பார்த்து மயங்கிய நிசாம் இதை விலைக்கு வாங்கிவிட்டார். மேலும் தன்னுடைய மொத்த அரண்மனைகளிலேயே நிசாமுக்கு மிகவும் பிடித்த இடம் இதுதானாம். 13 வயதில் இந்த மாளிகைக்கு வந்துள்ளார் நிசாம். அதன்பிறகு அவர் தந்தை வாழ்ந்து வந்த மாளிகைக்குகூட போகவில்லை. இதே அரண்மனையில் காலம் முழுவதையும் கழித்தார் என்பதிலிருந்தே இந்த இடம் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம்.
PC:Archäologisches Museum Hamburg

ஆழ்வார்

ஆழ்வார்

பாங்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சரிஸ்கா வனப்பகுதில் அமைந்திருக்கிறது.

இந்த பாங்கர் கோட்டை இந்தியாவில் இருக்கும் மிகவும் திகிலான இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த கோட்டையில் மாலை நேரத்திற்கு பின் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கோட்டையை பற்றிய பல அமானுஷமான கதைகள் உலாவருகின்றன.

PC:Zeeyanketu -

 பொக்கிஷம்

பொக்கிஷம்

இந்த கோட்டையில் வெறுமனே பேய் கதைகள் கிளப்பிவிடப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த கோட்டையின் ஒரு புறத்தில் கோடிக்கணக்கில் புதையல்கள் இருக்கின்றன. இது இந்த கோட்டையைக் கட்டிய மன்னர் பரம்பரையினர் பதுக்கி வைத்ததாக இருக்கலாம். இதை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இங்கு பேய் நடமாடுவதாக கிளப்பி விடுகின்றனர்.


PC:Ashish kalra

 ஜெய்கர்

ஜெய்கர்

ஜெய்கர் கோட்டை அல்லது வெற்றிக்கோட்டை என்றழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கழுகுமலை என்றழைக்கப்படும் மலையின் உச்சியில் ஆம்பேர் கோட்டையிலிருந்து 400 அடி உயரத்தில் இந்த ஜெய்கர் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. முறையே தெற்கு மற்றும் கிழக்குத்திசை நோக்கி அமைந்துள்ள துங்கார் தர்வாசா மற்றும் அவாணி தர்வாசா ஆகிய இரு வாசல்கள் இந்த கோட்டையில் உள்ளன. கோட்டை வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ள சாஹர் தலாவ் எனும் நீர்த்தேக்கம் இந்த கோட்டையின் பிரதான நீராதாரமாக பயன்பட்டுள்ளது.


PC:A.Savin

 ஒரே நாளில் கோடிஸ்வரன்

ஒரே நாளில் கோடிஸ்வரன்

ஒரு முக்கியமான படைக்கேந்திரமாக திகழ்ந்துள்ள இந்த கோட்டை 3 கி.மீ நீளமுடைய கோட்டைச்சுவரை கொண்டுள்ளது. இந்த கோட்டையின் உச்சியில் ஜெய்வான் எனப்படும் 50 டன் எடையுடைய பீரங்கி ஒன்றும் காணப்படுகிறது. 8 மீட்டர் நீளமுடைய வாய்ப்பகுதியை கொண்டுள்ள இது உலகில் மிகப்பெரிய சக்கர பீரங்கிகளில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. இந்த கோட்டையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள தியா புர்ஜ் எனப்படும் ஏழடுக்கு மாளிகையிலிருந்து கீழே மொத்த நகரத்தின் அழகையும் கண்டு ரசிக்க முடிகிறது. இந்த கோட்டையின் அடியில் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு வதந்தியும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வரலாற்றுகால நாணயங்கள், பீரங்கிகள் மற்றும் பொம்மைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


PC:Acred99

 பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாப சுவாமி கோயில்

கலியுகம் தொடங்கி சரியாக 964 நாள்கள் கழித்து இந்த கோயில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அப்படி பார்க்கையில் இந்த கோயில் நமக்கு சொல்லவருவது என்ன என்பது கேட்பவருக்கு மர்மமாகவும், அச்சமாகவும் உள்ளது. இந்த கோயில் பற்றி கேள்விப்படுபவர்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதி கொள்கின்றனர். கோயிலின் ரகசிய அறைகள் 5ல் மூன்று மட்டுமே திறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளின் மதிப்புகள் கணக்கிட்டபோது அதன் மொத்த மதிப்பு அனைவரையும் தள்ளாடச் செய்தது.

PC: Ashcoounter

கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடிகள்

கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடிகள்

கோயிலின் ரகசிய அறைகள் 5ல் மூன்று மட்டுமே திறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கம், வெள்ளி, வைர வைடூரிய நகைகளின் மதிப்புகள் கணக்கிட்டபோது அதன் மொத்த மதிப்பு அனைவரையும் தள்ளாடச் செய்தது. கிட்டதட்ட 2 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஒரு கோயிலில் முடங்கியுள்ளது தெரிந்தது பல்வேறு தரப்பினர் இதை நாட்டுக்காக பயன்படுத்தவேண்டும் எனவும், சிலர் இது மன்னர் சொத்து கோயிலுக்கு மட்டுமே சொந்தம் எனவும் கூறிவந்தனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது கடைசி அறையில் கிடைக்கப்போகும் மொத்த மதிப்பு இந்த நான்கு அறைகளிலும் பல மடங்காகும்.

திருவனந்தபுரி

திருவனந்தபுரி


சிலர் திருவிதாங்கூர் மன்னர்கள் சேரர்கள் எனவும், குலசேகர ஆழ்வாரின் வழித்தோன்றல்கள் எனவும் கூறுகின்றனர். இருப்பினும் தற்போதைய மன்னர் குடும்பத்தினர் கேரள தமிழ் கலந்த முறையே பின்பற்றுகின்றனர். இந்த பத்மநாபசுவாமி கோயில் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலுடன் அதிக அளவில் ஒத்துள்ளது. இந்த கோயிலின் பெயரிலேயே கேரள மாநிலத்தின் தலைநகருக்கு திருவனந்தபுரம் என்று பெயர் வந்தது.

 தூங்கும் விஷ்ணுபகவான்

தூங்கும் விஷ்ணுபகவான்

இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது. இந்த கோயிலில் உடைக் கட்டுப்பாடு மிகவும் கட்டுப்பாடாக இருக்கும். வேட்டி சட்டைகள், புடவை, தாவணிகள் மட்டுமே அணிந்து செல்லவேண்டும் என்ற கட்டப்பாடு உண்டு. விமானத்துக்கு முன்னதாக இருக்கும் நடைமேடை ஒரே ஒரு கல்லால் ஆனது. மூன்று கதவுகள் வழியாக பத்மநாபனின் சிலையை தரிசிக்கமுடியும்

 மர்ம அறைகள்

மர்ம அறைகள்

மற்ற அறைகளில் என்ன இருக்கிறது என்று மதிப்பிட்டு கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி மதிப்புடைய பொருள்கள் என கண்டறிந்தவர்கள் ஏன் இந்த மர்ம அறையை திறக்கவில்லை என சந்தேகம் வருகிறதல்லவா. திறக்கப்பட்ட அறைகளில் 500 கிலோ நகைகள், 18 அடி உயர பை ஒன்றில் முழுவதும் தங்க நாணயங்கள் என பிரம்மிக்க வைத்துள்ளது. இதைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படும் மர்ம அறை திறக்கப்படாமல் இருந்ததன் மர்மம் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

PC: chetanpathak1974

 கிருஷ்ணா நதி

கிருஷ்ணா நதி


உலகின் தலைசிறந்த வகை வைரக்கற்கள் அடங்கிய புதையல் ஒன்று கிருஷ்ணா நதியின் கிளையாற்றில் இருக்கிறது. கோல்கொண்டா பேரரசு இந்த புதையலை கொண்டிருந்ததாக கூறப்படுவதுண்டு. கோல்கொண்டா அரசு உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவி கட்டமைத்து பராமரித்து வந்தது தெரிந்த விசயம்தான். அவர்கள் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் சொத்துமதிப்பை அவ்வளவு எளிதாக அளவிடமுடியாது.

PC:Chris 73

கோகினூர் வைரம்

கோகினூர் வைரம்

கிருஷ்ணா நதியில் மூழ்கியுள்ள புதையல்கள் இப்போதும்கூட அங்குதான் இருக்கிறதாம். உலகப் பிரசித்தி பெற்ற கோகினூர் வைரம் இந்த புதையல்களிலிருந்து எடுக்கப்பட்டதுதான். இந்த ஆற்றின் அடியில் மிகப்பெரிய வைரப் பாறை இருக்கலாம் என கருதப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்புபவர்களின் மனதைப் பொறுத்தது. எனினும், இது செவி வழி செய்தியாக மிக அதிக அளவில் பரவிவருகிறது.

PC:Zeman

சோன்பந்தர்

சோன்பந்தர்


சோன்பந்தர் குகைக்கு போற்றத்தக்க வரலாறு உள்ளது. மேலும் இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்கியது என்று நம்பப்படுகிறது. இந்த குகை வழியாக பிம்பிசாரா அரசரின் பெட்டகத்திற்கு செல்லும் பாதை இன்னமும் கூட அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது.

சென்றால் உயிருடன் திரும்பமுடியாது

சென்றால் உயிருடன் திரும்பமுடியாது


புதிர் போடும் வகையில் இந்த குகையில் காணப்படும் கல்வெட்டுகள் பூடகமாக விளங்குகிறது. இந்த குகைக்கு பிம்பிசாரா அரசருடன் வரலாற்று தொடர்புகள் இருப்பதால் சுற்றுலாப்பயணிகளை இந்த இடம் வெகுவாக ஈர்க்கும். இங்கு சென்று உள்நுழைவது அவ்வளவு எளிதல்ல. இதனுள் பல அரிய வகை விசமுள்ள உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இங்கு ஒரு முறை சென்றவர்கள் திரும்பி வரமுடியாது என்றும் கூறுகிறார்கள். அப்படி வந்தாலும் வெறுங்கையுடன்தான் முடியுமாம். இங்குள்ள புதையல்களை கண்ணால் கண்டவர் அடுத்த நாளே இறந்துவிடுவார் என்றும் சில புரளிகள் நம்பப்பட்டு வருகின்றன.

PC:Rembrandt

கொல்லூர் மூகாம்பிகா

கொல்லூர் மூகாம்பிகா

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் கொல்லூர் அருகே அமைந்துள்ளது இந்த கோயில். இந்த கோயிலின் வருமானம் 17 கோடி ரூபாய் ஆகும்.அந்த குறியீடு அந்த கோயிலில் பெரும்மதிப்பு கொண்ட புதையல் ஒன்று இருப்பதாக குறிக்கிறது என்கின்றனர் முனிவர்கள். அந்த புதையல் வெளிஉலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்.

PC:Rojypala

பல்லாயிரம் கோடி பொக்கிஷங்கள்

பல்லாயிரம் கோடி பொக்கிஷங்கள்


இந்த புதையல்களின் மொத்தமதிப்பும் சேர்த்தால் 100 கோடியைத் தாண்டும் என்கின்றனர். இந்த கோயிலின் தாய் மூகாம்பிகை சிலையின் முகம் முழுவதும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது. அதை விஜயநகர பேரரசர் வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலையுடன் அவர் எக்கச்சக்க கோடிக்கணக்கான நகைகளையும், வேறு பொருள்களையும் தந்ததாகவும், அவை அந்த கோயிலின் மர்ம அறையில் பொக்கிஷமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

PC:tesoro.jpg

Read more about: travel, india, temple