Search
  • Follow NativePlanet
Share
» »ஜெய்சல்மர் நகருக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன தெரியுமா?

ஜெய்சல்மர் நகருக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் ஆகும். சுட்டெரிக்கும் பாலைவனம் சூழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அங்கே செல்லக் காரணம் இந்தியாவின் ராஜ வாழ்கையின் அடையாளங்கள் மாறாமல் இன்றும் அப்படியே இருப்பது தான். பெரிய பெரிய கோட்டைகள், ஆடம்பரத்தின் உச்சத்தில் கட்டப்பட்ட மாளிகைகள், ராஜ உணவுகள், இன்றும் உற்சாகத்துடன் நடைபெறும் நாட்டுப்புற கலை நிகழ்சிகள் போன்றவை தான் ராஜஸ்தானுக்கு சுற்றுலா பயணிகள் வர முக்கிய காரணமாகும்.

ராஜஸ்தானில் இருக்கும் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது ஜெய்சால்மர் நகரமாகும். 'தங்க நகரம்' என்றழைக்கப்படும் இது ராஜஸ்தானின் ராஜ வாழ்கையை அனுபவித்து வாழ சிறந்ததொரு இடமாகும். வாருங்கள் நாம் ஜெய்சால்மர் நகருக்கு ஏன் சுற்றுலா வரவேண்டும் என்பதற்கான 5 காரணங்களை தெரிந்துகொள்வோம்.

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சல்மர் நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது இந்நகரின் மையத்தில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான ஜெய்சல்மர் கோட்டை தான். கி.பி 1156ஆம் ஆண்டு 'ஜெய்சால்' என்ற மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது.

எண்ணற்ற போர்களை சந்தித்திருக்கும் இக்கோட்டைக்குள் சென்றுவருவது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும்.

Magalie L'Abbé

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

பாலைவனத்தில் கிடைக்கும் மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோட்டையினுள் அக்கால அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

அரசர்களின் போர் வாள், அவர்களின் ஆபரணங்கள், பல்லக்கு, மது அருந்த பயன்படுத்திய பொற்கிண்ணங்கள் போன்றவற்றை நாம் காணலாம்.

Pablo Pecora

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

பொன்னிறமான கற்களை கொண்டு கட்டப்பட்டிருப்பதால் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின் போது இக்கோட்டை ஏதோ தங்கத்தினால் கட்டப்பட்டதை போன்று ஜொலிக்கிறது.

இதனால் தான் இதற்கு 'தங்க கோட்டை' என்ற சிறப்புப்பெயர் வந்திருக்கிறது.

Andrew Miller

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டையின் ஒரு பகுதியில் இன்றும் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

இவர்கள் கோட்டை பாதுகாப்பில் இருந்த வீரர்களின் சந்ததிகள் என்று சொல்லப்படுகின்றனர்.

Abhishek Saha

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டையினுள் கிட்டத்தட்ட ஒரு முழுமையான நகரமே இயங்கிவந்திருக்கிறது. இக்கொட்டையினுள் பல ஜெயின் கோயில்களும், பிரசித்தி பெற்ற லக்ஷ்மிநாதர் ஆலயமும் இருக்கிறது.

DJ SINGH

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

இந்த கோட்டையினுள் அரசர்கள் ஆடம்பரமாக வாழ்ந்த 'ராஜ் மஹால்' என்ற அழகிய அரண்மனை ஒன்றும் இருக்கிறது.

இதன் சுவர்கள் முழுக்க நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் இந்த மாளிகைனுள் தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்கால மன்னர்களின் ஆடம்பரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த மாளிகை இருக்கிறது.

Nagarjun Kandukuru

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென பிரத்யேகமான சுவையுடைய உணவுகளை கொண்டிருக்கின்றன. அந்தந்த பிரதேசங்களில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கப்படும் பாரம்பரிய உணவுகளின் சுவைக்கு வேறெதுவும் நிகராக முடியாது.

சாதாரண பாரம்பரிய உணவுகள் என்பதை தாண்டி அரசர்களுக்கு பரிமாறப்பட்ட ராஜ உணவுகளை ராஜஸ்தானில் இன்றும் நாம் சுவைக்க முடியும்.

Connie Ma

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

பாலைவன பிரதேசமான ராஜஸ்தானில் பொதுவாகவே தண்ணீர் மற்றும் காய்கறிகள் கிடைப்பது கடினம். இதனால் இங்கு சமைக்கப்படும் உணவுகளில் பருப்பு மற்றும் ஆட்டிறைச்சி அதிகம் இடம்பெறுகிறது.

மணலில் சூடான கற்களை போட்டு அதன் மேல் இறைச்சியை வேகவைக்கும் முறை இங்கே பின்பற்றப்படுகிறது.

Robert Logie

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

இனிப்புகள் ராஜஸ்தானிய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக தென்னிந்திய உணவுகளில் இனிப்பு உணவுக்கு முன்பாக அல்லது இறுதியில் மட்டுமே உட்கொள்ளப்படும். ஆனால் ராஜஸ்தானிய உணவுகளில் இனிப்புகள் பிராதனமாக பரிமாறப்படுகின்றன.

சுர்மா, கீவார், குஜியா, ஜிலேபி போன்றவை பிரபலமான ராஜஸ்தானிய இனிப்பு பண்டங்களாகும்.

Rajesh Pamnani

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

ராஜஸ்தானிய ராஜ உணவுகள் :

ஜெய்சால்மரில் இருக்கும் சில உணவகங்களில் சுவை மாறாத ராஜ போஜனம் பரிமாறப்படுகிறது. லால் மான்ஸ், சாந்த் ரோ அச்சார், க்ஹாத் கர்கோஷ் போன்ற நாவூறும் சுவையுடைய உணவுகளை சுவைக்க மறந்துவிட்ட்டாதீர்கள்.

Candice and Jarrett

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

பாலைவன இரவுகள் மிக அற்புதமானவை. பகலில் வெய்யில் கொளுத்தினாலும் இரவில் நடுங்கவைக்கும் குளிர் நிலவும். ஈரப்பதம் இல்லாத காற்றின் காரணமாக பாலைவன வானத்தில் மேகங்கள் இருக்காது. இதனால் வானில் நட்சத்திரங்கள் அத்தனை தெளிவாக தெரியும்.

Dan.be

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திரங்கள் வானில் ஜொலித்துக்கொண்டிருக்க உங்களுக்கு பிடித்தமானவருடன் ஓரிரவை கழிப்பது எத்தனை சுகமானதாக இருக்கும்?.

வித்தியாசமாக தேனிலவு கொண்டாட நிறைப்பவர்கள் ஜெய்சால்மருக்கு வந்து நட்சத்திர இரவை கொண்டாடலாம்.

Daniel Mennerich

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

இதமாக நெருப்பை சுற்றி அமர்ந்துகொண்டு ராஜஸ்தானிய நாட்டுப்புற கலைஞர்களின் இசையை கேட்கலாம், அவர்களின் நடனத்தை கண்டு மகிழலாம்.

இதற்கான கேம்ப்கள் சில தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

Diana

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திரங்களுக்கு கீழே காதல் !!

நட்சத்திர இரவு !!

கடிசிசார் ஏரி :

கடிசிசார் ஏரி :

ஜெய்சால்மர் நகரில் இருக்கும் மற்றுமொரு சுற்றுலா ஈர்ப்பாக இருப்பதுகடிசிசார் ஏரி ஆகும். 1367ஆம் ஆண்டு ராவல் கடிசி சிங் என்ற மன்னரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஏரி ஆகும்.

ஜெய்சால்மர் நகரின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு அமைக்கப்பட்ட இந்த ஏரி மாலை நேரத்தை செலவிட அருமையான இடமாகும்.

Kannan Muthuraman

கடிசிசார் ஏரி :

கடிசிசார் ஏரி :

அந்திப்பொழுதில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இந்த ஏரி தங்க குளம் போல காட்சியளிக்கிறது.

இந்த ஏரியை சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள் மற்றும் மாடங்கள் இருக்கின்றன. இவற்றில் நின்றபடி சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.

Kirk Kittell

கடிசிசார் ஏரி :

கடிசிசார் ஏரி :

மாலை மங்கும் நேரத்தில் கடிசிசார் ஏரி!!

El Toñio

பாலைவன மணலில் கார் ஓட்டலாம் :

பாலைவன மணலில் கார் ஓட்டலாம் :

துபாய் போன்ற ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பாலைவனத்தில் கார் ஓட்டும் சாகச விளையாட்டு மிகப்பிரபலம்.

இந்த விளையாட்டு இப்போது ஜெய்சால்மரிலும் பிரபலமாகி வருகிறது. தார் பாலைவனத்தில் இந்த சாகச விளையாட்டு நடைபெறுகிறது.

உயரமான மணல் திட்டுகளில் கார் ஒட்டி மகிழலாம்.

Mandala Travel

பயண விவரங்கள்

பயண விவரங்கள்

ஜெய்சல்மர் நகரை எப்படி சென்றடைவது?, அங்கே இருக்கும் ஹோட்டல்களின் விவரங்கள் என்னென்ன என்பது போன்ற சுற்றுலாவுக்கு தேவையான விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X