Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி லட்டுவின் சுவையில் மாற்றம் – உயர் ரக பொருட்களை பயன்படுத்தி ருசியான லட்டுக்கள் தயாரிக்க முடிவு!

திருப்பதி லட்டுவின் சுவையில் மாற்றம் – உயர் ரக பொருட்களை பயன்படுத்தி ருசியான லட்டுக்கள் தயாரிக்க முடிவு!

திருமலை திருப்பதி என்றாலே ஏழுமலையானுக்கு பிறகு நம் அனைவர்க்கும் பிடித்தது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான். எத்தனை கோயில் பிரசாதங்கள் இருந்தாலும் திருப்பதி லட்டு தான் சுவையான பிரசாதங்களின் பட்டியலில் முதல் இடம். ஆனால் லட்டுவின் சுவையும், தரமும் நாளடைவில் குறைந்து விட்டதாக பக்தர்கள் கூறி வந்த நிலையில் புதிதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட செயல் அலுவலர் சியாமளா ராவ் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆம், இனி பழைய திருப்பதி லட்டு சுவையில் உங்களுக்கு சிறந்த திருப்பதி லட்டுக்கள் வழங்கப்படுமாம்!

சிறந்த முறையில் தயாரிக்கப்படவிருக்கும் திருப்பதி லட்டு

திருப்பதி திருமலையில் வழங்கப்படும் லட்டுவில் இனி சிறந்த தரத்தில் உள்ள நெய், கடலை மாவு, ஏலக்காய் கலந்து சிறந்த முறையில் சுவையான லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும் TTD அதிரடியாக அறிவித்துள்ளது. ஆம் அதன் படி, சிறந்த பொருட்களை கொண்டு தரமான முறையில் லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சியாமளா ராவ்

ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுபேற்றுக் கொண்ட சந்திர பாபு நாயுடு திருமலையை சிறந்த வசதிகளுடன் உருவாக்க சபதம் பூண்டுள்ளதாக தெரிவித்தார். அதிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தினம் தினம் புது புது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அலுவலர் சியாமளா ராவ் திருமலையில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

achangeinthetasteoftirupatiladdu

திருப்பதி லட்டுவின் சுவை குறைவதற்கான காரணம் என்ன

சமீபத்தில் திருமலையில் லட்டு தயாரிக்கும் பணியாளர்களை அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார் தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ். லட்டு தயரிக்கும் ஊழியர்களைப் பார்த்து 'லட்டு தயாரிப்பதில் உந்கலௌகுஎ என்னவெல்லாம் பிரச்சினை இருக்கிறது? எவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்'. லட்டுவின் தரம் குறைவதற்கான காரணம் என்ன, அதனை விளக்குங்கள் என்று கேட்டார்.

நெய், கடலை மாவு, ஏலக்காய், சர்க்கரை தரம் அதிகரிக்கப்பட வேண்டும்

அதற்கு பதில் அளித்த லட்டு தயாரிக்கும் ஊழியர்கள், லட்டு தயாரிப்பதில் அதிக பணிச் சுமை இருப்பதாகவும் போதிய கூடுதல் பணியாளர்களை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் லட்டு தயாரிக்க தேவைப்படும் நெய், கடலை மாவு, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக பணியாளர்கள் கூறினர்.

achangeinthetasteoftirupatiladdu1

முக்கிய முடிவெடுத்த TTD செயல் அலுவலர்

அதுமட்டுமல்லாமல், லட்டு தயாரிக்க தேவைப்படும் அனைத்து பொருட்களையும் டெண்டர் விடப்பட்டு குறைந்த விலைக்கு பொருட்களை வழங்கும் சப்ளையர்களிடமிருந்து பொருட்கள் வாங்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் செயல் அலுவலரிடம் கூறினர். இவை அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த TTD செயல் அலுவலர் ஆவண செய்வதாக கூறினார்.

இனி பழைய திருப்பதி லட்டுவின் சுவையை நீங்கள் எதிர்பார்க்கலாம்

அதன் பிறகு பேசிய தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், சிறந்த தரத்தில் நெய், கடலை மாவு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மாதிரி லட்டுக்கள் தயாரித்துக் காட்டுங்கள் என்று பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டார். தரமான பொருட்களைக் கொண்டு தரமான மாதிரி லட்டு தயாரித்து அதனை சோதனை செய்த பிறகே பக்தர்களுக்கு அதே போல, பழைய திருப்பதி லட்டுவின் சுவை குறையாத லட்டுக்களை உருவாக்கி பிரசாதமாக வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

More News

    Read more about: tirupati tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+