Search
  • Follow NativePlanet
Share
» »ஏனுங்! கோயம்பத்தூர சுத்தி பாக்கலாம் வாங்க

ஏனுங்! கோயம்பத்தூர சுத்தி பாக்கலாம் வாங்க

கோயம்பத்தூர், தமிழ்நாட்டுல இருக்குற மிக வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றான இது தன்னை நோக்கி வரும் எல்லோருக்கும் அரவணைப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்கும் நல்லதொரு நகரம். கல்வி மற்றும் தொழில் துறைகளில் சமீப காலங்களில் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும் இந்நகரம் சுற்றுலாத்துறையிலும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த கோவை மாநகரத்தில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா?.

வாருங்கள் கோவையை ஒரு நாள் முழுதாக சுற்றிபார்க்கலாம். அந்த ஒரு நாளில் இங்கே வித விதமாக ஷாப்பிங் செய்திடலாம், அதிசுவையான உணவுகளை ருசிக்கலாம், தியானத்தின் மூலம் புத்துணர்ச்சி பெறலாம், வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களில் வழிபாடு செய்யலாம். கோயம்பத்தூரில் பெரிதாக சுற்றிப்பார்க்க ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இதை படித்து முடிக்கையில் நீங்கள் அந்த கருத்தை மாற்றிக்கொள்வீர்கள். வாங்க கெளம்பலாம்...

சர்வதேச இணையதள ஷாப்பிங் மேளா: பெற்றிடுங்கள் விமான டிக்கெட் கட்டணத்தில் 80% வரை தள்ளுபடி

 பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

கொங்கு நாட்டில் இருக்கும் மிகப்பழமையான கோயில் என்றால் அது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சுவயம்பு லிங்கமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆகும். இங்கே சிவபெருமான் உமையாள் பஞ்சநாயகியுடன் பட்டீஸ்வரராக வீற்றிருக்கிறார்.

Photo:Mari Kumar

 பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

பழந்தமிழர் கட்டிடக்கலைக்கு கொங்குநாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் மிகத்தத்ரூபமாக வடிக்கப்பட்ட சிவனின் பல ரூபங்களை கண்டு ரசிக்கலாம். இங்குள்ள கோயில் கற்க்கூரையில்கற்களால் ஆன சங்கிலியை பார்க்கலாம்.

Photo:Edmund David Lyon

 பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:


சிதம்பரத்தில் இருப்பது போன்ற பேரழகு வாய்ந்த நடராஜர் சிலையை நாம் இங்கே காணலாம். தவிர இங்குள்ள கோயில் சுவற்றில் நிறைய கல்வெட்டுகளையும் காண முடியும்.

photo:globetrotter_rodrigo

 பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

பேரூர் பட்டீஸ்வரர் கோயில்:

அற்புதமான கட்டிடக்கலை, ஆன்மீக சூழல் ஆகியவை நிறைந்திருக்கும் இந்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் நாம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. காந்திபுரத்தில் இருந்து வெறும் ஒன்பது கி.மீ தொலைவில் இருக்கும் இக்கோயிலை 20 நிமிடங்களில் அடைந்து விடலாம்.

photo:Pranav Bhasin

 கோயம்பத்தூரில் ஷாப்பிங்!

கோயம்பத்தூரில் ஷாப்பிங்!

கோயம்பத்தூரில் ஷாப்பிங் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் இடங்கள் என்றால் அது கோவை டவுன் ஹால் பகுதியில் அமைந்திருக்கும் ஒப்பணக்கார வீதி மற்றும் காந்திபுரத்தில் இருக்கும் கிராஸ் கட் ரோடு ஆகியவை தான்.

Photo:Nizar Ahmed

 கோயம்பத்தூரில் ஷாப்பிங்!

கோயம்பத்தூரில் ஷாப்பிங்!


ஒப்பனக்கார வீதி துணி வகைகள் வாங்க சிறந்த இடம். இங்கு தமிழ் நாட்டில் மிகப்பிரபலமான ஜவுளிக்கடைகள் அடுத்தடுத்து
அமைந்திருகின்றன. அவை தவிர வட நாட்டு துணி வியாபாரிகளின் சின்ன கடைகளும் இங்கே நிறைய இருக்கின்றன. துணி வகைகளுக்கு அடுத்து இங்கே அதிகம் கிடைப்பது பெண்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள் தான்.

Photo:Kumara Sastry

கிராஸ் கட் ரோடு:

கிராஸ் கட் ரோடு:


காந்திபுரம் பேருந்து நிலையத்தை ஒட்டியே அமைந்திருக்கும் இந்த கிராஸ் கட் ரோடு எலெக்டிரானிக் பொருட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் வாங்க சிறந்த இடமாகும்.

Photo:Sodabottle

கிராஸ் கட் ரோடு:

கிராஸ் கட் ரோடு:


தீபாவளி, பொங்கல் காலங்களில் இங்கே கூட்டம் அள்ளும். இந்த இடத்தின் சிறப்பு என்னவெனில் ஷாப்பிங் முடித்த கையேடு சுவையான உணவுகளையும் இங்கே ருசிபார்க்க முடியும். வட இந்திய துரித உணவுகள், பாரம்பரியமான தென் இந்திய சாப்பாடு, நாவூற வைக்கும் கோழிக்கறி போன்றவற்றை இங்குள்ள கடைகளில் வாங்கி ருசி பார்க்கலாம்.

Photo:Kumara Sastry

மருதமலை மாமணியே முருகையா:

மருதமலை மாமணியே முருகையா:

அறுபடை வீடுகளுக்கு அடுத்து தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பிரபலமான முருகன் கோயில் என்றால் அது கோயம்பத்தூரில் இருக்கும் மருதமலை முருகன் கோயில் தான்.

Photo:AdithyaVR

மருதமலை மாமணியே முருகையா:

மருதமலை மாமணியே முருகையா:


கோவை நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் பாரதியார் பல்கலைக் கழகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த முருகன் கோயில் கோயம்பத்தூரின் மற்றுமொரு முக்கிய ஆன்மீக சுற்றுலாத்தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அருமையான இயற்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த கோயிலின் அருகில் பாம்பாட்டி சித்தர் குகையும் அமைந்திருக்கிறது.

Photo: Ramana

மருதமலை மாமணியே முருகையா:

மருதமலை மாமணியே முருகையா:

காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இடம் இது. இங்கு அடிவாரத்தில் இருந்து கோயிலை அடைய கோயில் நிர்வாகத்தின் பேருந்து சேவை உண்டு. அதேபோல காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவையும் உண்டு.

Photo:Rsrikanth05

கோவை குற்றாலம் (அ) சிறுவாணி அருவி:

கோவை குற்றாலம் (அ) சிறுவாணி அருவி:

கோவை நகருக்கு பக்கத்தில் ஆறுதலுக்கு இருக்கும் ஒரே அருவி என்றால் அது கோவை குற்றாலம் என்று அழைக்கப்படும் சிறுவாணி அருவி தான். கோவையில் இருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அருவி குளுமையான இயற்க்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது.

Photo:Ramana

கோவை குற்றாலம் (அ) சிறுவாணி அருவி:

கோவை குற்றாலம் (அ) சிறுவாணி அருவி:


உலகிலேயே இரண்டாவது மிக சுவையான நீர் என்று சொல்லப்படும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அருவியில் நண்பர்களுடன் சென்று நீரில் ஆட்டம் பட்டம் என கொண்டாடலாம். இங்கே ஒரு இடத்தை தாண்டி நெகிழி(Plastic) பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த அருவி தவிர பொள்ளாச்சிக்கு பக்கத்தில் குரங்கு அருவி என்ற அழாகான அருவி ஒன்றும்
அமைந்திருக்கிறது.

தியான லிங்கம்:

தியான லிங்கம்:


கோவை குற்றாலத்திற்கு பக்கத்திலேயே அமைந்திருக்கும் புதுமையான ஒரு ஆன்மீக ஸ்தலம் தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட தியான லிங்கமாகும். சர்வ மதத்தினரும் பயன் பெரும் வகையில் அமைந்துள்ள இவ்விடத்தின் மையமாக பாதரசத்தினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் அமைந்திருக்கிறது.

Photo:Scott Ferguson

தியான லிங்கம்:

தியான லிங்கம்:

நாம் இந்த லிங்கத்தை சுற்றி அமர்ந்து அமைதியாக தியானத்தில் ஈடுபடலாம். இந்தலிங்கம் அமைந்துள்ள கூடத்தில் நாம் எழுப்பும் சிறு ஒலிகூட பல மடங்கு சத்தமாக பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தீர்த்த லிங்கம் என்னும் இடத்தில் பாதரசத்தினால் செய்யப்பட்ட லிங்கத்தை நீரில் நீந்தி சென்று அதனை தொட்டு தரிசிக்கும் வாய்ப்பையும் பெறலாம்.

Photo:Scott Ferguson

சுங்கம்-உக்கடம் பாலம்

சுங்கம்-உக்கடம் பாலம்

இரவு நேர விளக்கொளியில் சுங்கம்-உக்கடம் பாலம். மேலே சொன்ன இடங்களில் பெரும்பாலானவற்றை சரியாக திட்டமிட்டால் ஒரே நாளில் சுற்றிபார்க்கலாம். இவை தவிர மேலும் சில நல்ல இடங்கள் கோயம்பத்தூரில் உண்டு அவற்றை மற்றுமொரு பகுதியில் பார்க்கலாம்.

Photo:Faheem9333

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+