» »சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா? பாகம் 2

சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா? பாகம் 2

Posted By: Udhaya

முதலில் இதை படியுங்கள்:

சென்னையிலிருந்து மைசூரு வரும் வழியில் பெங்களூருவில் ஒருநாள் செலவழித்தோம். அதுகுறித்து விரிவான கட்டுரைக்கு இங்கு கிளிக் செய்யுங்கள் 

தொடர்ச்சி:

உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரு ஹோட்டலில் இரவு பொழுதை கழித்துவிடுங்கள். நேட்டிவ் பிளானட் தரும் யோசனைகளின்படி நீங்கள் 800 ரூபாய் செலவில் ஓரளவு நல்ல தரமான

ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கலாம்.

குடும்பத்தில் 3 பேர் என்ற கணக்கில் இந்த கட்டுரை தரப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே உணவுப் பண்டங்கள் எடுத்து வந்துவிடுவதால் தனியாக செலவு எதும் இருக்காது. மேலும் காலை ,

மாலை, இரவு உணவுகளுக்குப் போக மீதி 2000ரூபாய் வரை கையில் இருக்கும்.

பொதுப்பேருந்தில் செல்வதால் கொஞ்சம் அதிகம் நேரமும், அதிக பணமும் செலவழித்தது போல் ஒரு தோற்றம் இருக்கும். அதை பற்றி கவலைப் படாமல் மைசூரு நோக்கி பயணிக்கலாம்

வாங்க

ரயில் பயணம்

ரயில் பயணம்

குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய நம் நாட்டில் ஒரே வழி ரயில் பயணம்தான்.

பெங்களூருவில் இருந்து மைசூரு செல்ல எண்ணற்ற ரயில்கள் உள்ளன. அவற்றில் சதாப்தி, மைசூரு எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ், ஹம்பி எக்ஸ்பிரஸ் ஆகியவை

முக்கியமானவையாகும்.

அதிகாலையிலேயே புறப்பட்டுவிடுங்கள். அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் மைசூரை அடைந்துவிடலாம்.

Rainer Haeßner

காலை உணவு

காலை உணவு

மைசூரின் சாம்ராஜ்புரம், டூரா, இட்டிகே குடு, ஜெயலக்ஷ்மிபுரம் ஆகிய இடங்களில் நல்ல சுவையான காலை சிற்றுண்டியை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். பின்னர் நம் சுற்றுலாவை

ஆரம்பிப்போம்

Manfred Sommer

மைசூரில் காணவேண்டிய இடங்கள்

மைசூரில் காணவேண்டிய இடங்கள்

பிருந்தாவன தோட்டம், மைசூர் உயிரியல் பூங்கா, மைசூர் மாளிகை, ஜகன்மோகன் மாளிகை, சாமுன்டீஸ்வரி கோயில், காரஞ்சி ஏரி, ரயில்வே அருங்காட்சியகம், கிருஷ்ணராஜ சாகர்

அணை முதலியன மைசூரில் நீங்கள் தவறவிடக்கூடாத இடமாகும்.

பயணம் ஆரம்பம்

பயணம் ஆரம்பம்

என்னதான் இவ்வளவு இடங்கள் இருந்தாலும் பேருந்தில் பயணிப்பவர்கள் அனைத்தையும் காண இயலாது. அதற்காகத்தான் ஒன் இந்தியா வழங்குகிறது இந்த பயண வழிகாட்டி.

தொடங்கும் இடம் மைசூர் சந்திப்பு ரயில் நிலையம். மைசூரு ரயில் நிலையத்தில் அமைந்திருக்கும் ரயில் அருங்காட்சியகத்தை காணத் தவறாதீர்கள்.

மைசூரு மாளிகை

மைசூரு மாளிகை

மைசூரு மாளிகை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 3 கிமீ தூரம் நீங்கள் ஆட்டோ அல்லது வேறு எந்த வாகனத்திலும் செல்லலாம்.

பேருந்து வசதிகளும் உள்ளன. தேவையென்றால் ரயில் நிலைய வாசலிலிருந்தே 95B, 116,116V, 122, 122A உள்ளிட்ட பல பேருந்துகள் மைசூரு மாளிகை வழியாகத்தான் செல்கின்றன.

சொந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு

சொந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு

சாலை வழியாக பயணிப்பதால் மைசூரு ரயில் நிலையம் செல்ல சற்று சிரமமாக இருக்கும். போக்குவரத்து நெரிசலை சகித்துக் கொண்டு செல்லவேண்டும். ரயில் மியூசியம் காணத்

தேவையில்லை என்றால் நெசாஎ 150A வை பிடித்து நேரடியாக மைசூரு மாளிகைக்கு வந்துவிடுங்கள். பின் அருகிலுள்ள மைசூரு விலங்கியல் பூங்காவுக்கும் சென்று வாருங்கள்.

Punithsureshgowda

கரஞ்சி ஏரி

கரஞ்சி ஏரி

விலங்கியல் பூங்காவுக்கு பின்பக்கம்தான் கரஞ்சி ஏரி உள்ளது. அங்கே பொழுது கழிக்க உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் குழந்தைகளுக்கும் விருப்பமாக இருக்கும்.

சொந்த வாகனத்தில் வந்தால் 3 நிமிடத்தில் அடைந்துவிடலாம். அல்லது 2 கிமீ நடந்து சென்றால் கரஞ்சி ஏரியை அடையலாம். முடியாதவர்கள் ஆட்டோவில் செல்லலாம்.

கிருஷ்ணராஜசாகர் அணை

கிருஷ்ணராஜசாகர் அணை

கரஞ்சி ஏரியில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிருஷ்ணராஜசாகர் அணை. சொந்த வாகனத்தில் வந்தால் டூரா, மோகரகல்லி, பெலகோலா, ஹுலிகரே வழியாக இந்த

அணையை அடையலாம்.

google map

 மாலைப் பொழுதின் மயக்கத்திலே

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

இத்தனை இடங்களுக்கும் போய்விட்டு பிருந்தாவன பூங்காவுக்கு போகாமல் எப்படி.

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ள இந்த பிருந்தாவனத்தை 5 முதல் 8 நிமிடங்களில் அடையலாம்.

மாலைப் பொழுதை பிருந்தாவனில் கழித்து இரண்டு நாள் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்யலாம்.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

கடலுக்கடியில் புதையுண்ட 70 ஆயிரம் கோட்டைகள்

கடலுக்கடியில் புதையுண்ட 70 ஆயிரம் கோட்டைகள்

கடலுக்கடியில் புதையுண்ட 70 ஆயிரம் கோட்டைகள்