Search
  • Follow NativePlanet
Share
» »நம்ம தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா??

நம்ம தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா??

உலகின் பல நாடுகளில் தமிழர்கள், தமிழ் பாரம்பரியம் கொண்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் இடங்களை நோக்கியப் பயணம் இது

By Udhaya

இந்திய மொழிகளில் மிக மிகப் பழமையான, வளமையான மொழி தமிழ். இதனால்தான் தமிழை உயர்தனிச்செம்மொழி என்கிறார்கள். பிறமொழிகளின் கலப்பில்லாமல், தெளிவான இலக்கணங்களைக் கொண்டுள்ள உயர்ந்த மொழி என்பதே இதன் அர்த்தமாகும்.

உலகில் பல்வேறு இடங்களில் தமிழர்கள் அல்லது தமிழர்களின் வம்சாவளிகள் வாழ்கின்றனர். போர்களினாலும், வேலைவாய்ப்புகளைத் தேடியும் அவர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த பதிவில் தமிழர்கள் வாழும் பகுதிகளையும் அவைச் சார்ந்த நாடுகள் பற்றியும் பார்க்கலாம்.

லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொண்ட நாடுகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்க ஐக்கிய நாடுகள்


அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் தமிழர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உயர் பணி , கல்விக்காகவும் மற்றும் தொழில் புரிவதற்காகவும் அமெரிக்காவுக்கு சென்ற தமிழ்மக்களில் பெரும்பாலானோர் அங்கேயே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர். சிலர் அமெரிக்காவில் தங்கி தொழில் புரிவதோடு, அவ்வப்போது தாய்நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, தனது நிர்வாகத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கினார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்கூட, மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நிறைந்த அமெரிக்காவில் ஏறக்குறைய 35 தமிழ் சங்கங்கள் தமிழ் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ப்ளூம் பாக்ஸை கண்டுபிடித்த ஸ்ரீதர் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் குறிப்பிடத்தக்க பிரபலங்களாவர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான ஆஸ்திரேலியாவில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற புலம்பெயர்வில் அகதிகளாக சென்ற தமிழர்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்புக்காக சென்ற தமிழர்கள் என ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் ஆட்சி மொழியாகும். அங்கு அலுவல்கள் தமிழிலும் அச்சிடப்படுகின்றன.

PC: Kenny (zoompict) Teo

இலங்கை

இலங்கை

தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுள்ள மற்றொரு நாடு இலங்கை. இங்கு கிட்டத்தட்ட 60 லட்சம் தமிழர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனினும் இது தோராயக் கணக்காகத்தான் இருக்கும். உள்நாட்டு போரின் போது இறந்த மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 1 கோடி தமிழர்கள் வரை இருந்திருக்கக்கூடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

PC: Mariss Balodis

ஐக்கிய அமீரகம்

ஐக்கிய அமீரகம்

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை ஒப்பிடுகையில் தமிழர்கள் அதிகமாக வேலைக்காக செல்லும் நாடு அமீரகம். கூலி வேலை, கட்டட மற்றும் பொறியியல் வேலைகளுக்கு அதிக அளவில் தமிழர்கள் அங்கு செல்கின்றனர். தமிழர்களுக்கென தனியே சங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் அங்கு இருக்கலாம் என்கிறது புள்ளிவிவரக் கணக்குகள்.

PC: M Ameer Sheriff

கனடா

கனடா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் சென்று சேர்ந்த நாடுகளுள் கனடா முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும். மேலும் , தொழிலுக்காகவும் பல தமிழர்கள் அங்கு சென்றுள்ளனர். கனடா பாராளுமன்றத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்கிறது மற்றொரு தகவல்.

PC: Philippe L PhotoGraphy

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

தமிழ் ஆட்சி மொழியாக உள்ள மற்றொரு நாடு சிங்கப்பூர். பல திரைப்படங்களிலும் நாம் பார்க்க முடியும். இங்கு 2 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்களாம். சிங்கப்பூரில் அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியை காண இயலும். விளம்பரப்பலகைகள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் தமிழ் வாழ்ந்து வருகிறது. அவர்களின் நாணயத்திலும் தமிழ் இருக்கிறது. சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள்.

PC: CDP Photography Canada

மலேசியா

மலேசியா

மலாய் மொழி கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு மொழி கற்போரின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மலேசியாவில் அதிக அளவில் தமிழர்களைக் காணலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தோட்ட வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் அங்கேயே தங்கி, வாழ்ந்து தங்கெளுக்கென தனிப்பெரும்பான்மையை உருவாக்கியுள்ளனர். மலாய், சீன மொழிகளுக்கு அடுத்து தமிழ் அதிகம் பேர்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. தமிழ் பத்திரிகைகள் மற்றும் தமிழ் படங்கள், ஆல்பங்கள் ஆகியவை மலேசியாவிலிருந்து வெளியாகின்றன.

PC: Liao Hsin Chi

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கின்றனர். ஏராளமான இந்து கோவில்கள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன. எனினும் இளைஞர்கள் தமிழ் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். மிகக் குறைந்த அளவே தமிழ் பேசும் மக்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர்.


PC: Filippo Bianchi

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து உள்ளிட்ட பிரிட்டிஷ் நாடுகளிலும் பல்வேறு தமிழர்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்கள் இங்கிலாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பெரும்பாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தமிழர்கள் அங்கு சென்றுள்ளனர்.

PC: Butch Osborne

பிஜி தீவுகள்

பிஜி தீவுகள்

கரும்பு சாகுபடிக்காக சென்னைமாகாணத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பிஜி தீவில் தங்கவைக்கப்பட்டனர். சற்றேறக்குறைய 50ஆயிரம் தமிழர்கள் வாழும் பிஜி தீவில் 2000 பேர் அளவுக்குதான் தமிழை பேச, படிக்க, எழுத தெரிந்தவர்களாக இருக்கின்றனர். மற்றவர்களின் தாத்தா, பாட்டியோடு தமிழ் வழக்கொழிந்து கூறப்படுகிறது.


PC: Sergio Pavan

மொரீசியஸ்

மொரீசியஸ்

அடிமைகளாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் நாளடைவில் குடியுரிமை பெற்றவர்களாக ஆகிவிட்டனர். இங்குள்ள போஜ்புரி மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாக இருக்கின்றனர். 50 ஆயிரம் தமிழ் பாரம்பரியமுடையவர்களில் 5000 பேருக்கும் குறைவானவர்களே தமிழ் பேசும் திறமையுடையவர்களாக இருக்கின்றனர்.

PC: MESA Programme

ரீயூனியன்

ரீயூனியன்

ரீயூனியன் தீவில் 30 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் தமிழர்கள். இவர்கள் பெயரளவில் தமிழர்களானாலும் தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. கூலி வேலைக்காக இடம்பெயர்வு செய்யப்பட்டு ரீயூனியன் தீவில் குடியமர்த்தப்ப்டடவர்களே இங்கு நிரந்தமாக வாழ்ந்துவருகின்றனர்.

PC: Yoann JEZEQUEL

More News

Read more about: tamil india travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+