Search
  • Follow NativePlanet
Share
» »நாகர்கோயில் நகரின் அழகிய சுற்றுலாப் புகைப்படங்கள் - கண்டுகளியுங்கள்

நாகர்கோயில் நகரின் அழகிய சுற்றுலாப் புகைப்படங்கள் - கண்டுகளியுங்கள்

நாகர்கோயில் நகரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இந்தியாவின் கடைகோடி மாவட்டத்தின் தலைநகர் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த நாகர்கோயில் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களுக்காக பெயர் பெற்றது

By Udhaya

நாகர்கோயில் நகரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இந்தியாவின் கடைகோடி மாவட்டத்தின் தலைநகர் எனும் பெருமையைப் பெற்றுள்ள இந்த நாகர்கோயில் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களுக்காக பெயர் பெற்றது. நாகர்கோயிலில் மட்டுமல்லாமல், அருகிலுள்ள நிறைய இடங்களிலும் சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை கண்டு ரசிக்க நீங்கள் நேரடியாக நாகர்கோயிலுக்குத்தான் வரவேண்டும். வரவேண்டுமென்று ஆசைதான். ஆனால் அதற்கான திட்டம் தற்போது இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்க.. நீங்க நாகர்கோயில் வந்து நேர்ல பாக்க வேண்டியதெல்லாம் உங்களுக்காக இங்கயே புகைப்பட வடிவில் தந்திருக்கிறோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

அண்ணா பேருந்து நிலையம் நாகர்கோயில்

அண்ணா பேருந்து நிலையம் நாகர்கோயில்

வெளியூரிலிருந்து நாகர்கோயிலுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பேருந்து நிலையத்தை நிச்சயம் வந்தடையவேண்டும். ஏனெனில் நாகர்கோயிலின் நடுப்பகுதி என்பது இந்த பேருந்து நிலையம்தான். இங்குதான் நாகர் கோயில் நகரத்திலிருந்து அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் நிறைய பேருந்துகள் இயக்கப்படும். மேலும் நகரத்தின் பெரும்பாலான ஷாப்பிங் கடைகளும் இங்குதான் காணமுடியும். அதனால் இந்த பேருந்து நிலையத்தை கிட்டத்தட்ட நாகர்கோயில் வரும் அனைவரும் கடந்துவிட்டே செல்கிறார்கள்.


Meenkulambu

பூதப்பாண்டி கிராமம்

பூதப்பாண்டி கிராமம்

நாகர்கோயிலின் அருகே இருக்கும் ஒரு கிராமம் பூதப்பாண்டி ஆகும். இது கிராமம் என்று பெயரளவில் அழைக்கப்பட்டாலும், வளர்ந்து வரும் சிறு நகரம்தான் இது. இங்கு பூதலிங்க சுவாமி கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அதுவே இந்த ஊருக்கு பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மேலும் இங்கு காணப்படும் இயற்கை காட்சிகள் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன.

Shareef Taliparamba

பூதப்பாண்டி கிராம குளம்

பூதப்பாண்டி கிராம குளம்

பூதப்பாண்டி கிராமத்திலிருக்கும் இந்த குளம் பெரும்பாலான நாட்களில் நீர் நிரம்பியே காணப்படுகிறது. நாகர்கோயிலின் வளமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். இந்த பகுதியில் எப்போது பசுமையாக காணப்படும் சுற்றுப்புறத்துக்கு இந்த கிராமத்து மக்களும் ஒரு விதத்தில் காரணமாகும். இன்றும் விவசாயத்தை கைவிடாமல் செய்துவரும் இவர்கள், தங்கள் விளைவித்த பொருள்களை வடசேரி சந்தைக்கு கொண்டு சென்று விற்பது வழக்கம்.

Prof. Mohamed Shareef

வடசேரி பேருந்து நிலையம்

வடசேரி பேருந்து நிலையம்

வடசேரி பேருந்து நிலையம் என்பது வெளியூர் மற்றும் வெளி மாநில பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையமாகும். இங்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம், நெடுமங்காடு, கொல்லம், கர்நாடகமாநிலம் பெங்களூரு, அருகாமை மாவட்ட தலைநகர்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூரிலிருந்து கன்னியாகுமரி சுற்றுலா வருபவர்கள் நிச்சயமாக இந்த பேருந்து நிலையத்துக்கு வருகை தந்து பின் இங்கிருந்து புறப்பட்டு செல்லவேண்டும்.

Meenkulambu

நாகர்கோயில் வயல்வெளி

நாகர்கோயில் வயல்வெளி

நாகர்கோயில் இயற்கையிலேயே மிகுந்து வனப்புடன் இயற்கை பசுமையான ஊர் ஆகும். இங்கு நிறைய குடியிருப்புகள் வர வர வயல்வெளிகள் குறைந்து வருகிறது என்பது கசப்புக்குரிய உண்மை. ஆனால் அதே நேரத்தில் இந்த ஊரில் இருக்கும் வயல்வெளிகள் மிகவும் குளிர்ச்சியானதாக கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இருக்கும். நிச்சயம் நீங்கள் இங்கு வருகை தரும்போது வயல்வெளிகளை ரசிப்பீர்கள்.

rajaraman sundaram

ரயிலில் செல்லும் போது நாகர்கோயில்

ரயிலில் செல்லும் போது நாகர்கோயில்


வயல்வெளிகள் மட்டுமல்ல சிறு காடுகளும், மலைகளும், நீர் ஆதாரங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தை வளமாக்குகின்றன. முக்கியமாக இந்த ரயிலில் பயணிக்கும்போது தென்படும் அனைத்துமே அட்டகாசமான காட்சிகள். நாகர்கோயிலுக்கு முன் இருக்கும் ஆரல்வாய்மொழி எனும் பகுதியில் காற்றாலைகள் மிக அதிகம். அங்கேயே தொடங்கிவிடும் நம் கண்காட்சி சுற்றுலா தொடங்கிவிடும்.

Irchnkanngc

நாகர்கோயில் கோட்டாரில் இருக்கும் நீச்சல் குளம்

நாகர்கோயில் கோட்டாரில் இருக்கும் நீச்சல் குளம்


நாகர்கோயில் நகரில் இருக்கும் ஒரு பகுதியான கோட்டாரில் இருக்கும் நீச்சல் குளம்.

Raman Patel

மழைக்கால மேகம், நாகர்கோயில்

மழைக்கால மேகம், நாகர்கோயில்

மழைக்கும் கன்னியாகுமரிக்கும் அப்படி ஒரு உறவு. வருடத்தின் பெரும்பாலான நேரத்தில் மழை மேகங்கள் குமரியை வளமாக்கப் புறப்பட்டு வந்துவிடும். மேற்கு மலையில் மோதி, கருமையிழந்து நீராய் பெய்யும் இந்த மழை. இப்போது கூட குமரியின் மழை மேகங்களை நீங்கள் காணலாம். ஆனால் சிலருக்கு மழைக்காலத்தில் சுற்றுலா செல்வது சற்று சிரமமான விசயம்தான் என்றாலும், குமரி மாவட்டத்தை சொர்க்கம் போல காண தகுந்த நேரம் மழைக்காலம்தான்.

PlaneMad -

நாகர்கோயில் காலைச் சிற்றுண்டி

நாகர்கோயில் காலைச் சிற்றுண்டி

உணவுக்கு பெயர்பெற்றது தமிழ்நாடு. அப்படியே கேரளமும். தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைந்து கொடுத்தார்போல இருக்கும் நாகர்கோயிலின் காலைச் சிற்றுண்டி. உங்களுக்கு இட்லி, வடை, தோசை, பொங்கல், பழ பஜ்ஜி, கட்டஞ்சாயா, புட்டு, கடலை என வகை வகையான உணவுகள் கிடைக்கும். இவை ஒன்றும் அந்த அளவு விலை இல்லை என்பது கூடுதல் தகவல்.

Prof. Mohamed Shareef

மீனாட்சிபுரம் நாகர்கோயில் டவுன்ட்டவுன்

மீனாட்சிபுரம் நாகர்கோயில் டவுன்ட்டவுன்


நாகர்கோயில் நகரில் ஷாப்பிங்க் செய்ய தகுந்த இடங்களில் முக்கியமானது இந்த பகுதிதான். இங்கு அருகிலேயே நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பலசரக்கு கடைகள் என எல்லா கடைகளும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து வாங்க சுலபமானதாக இருக்கிறது.

Meenkulambu

நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையம்

நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையம்

நீங்கள் கன்னியாகுமரிக்கு ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், நேரடியாக கன்னியாகுமரிக்கு பயணிக்கலாம். ஆனால் பெரும்பாலான ரயில்கள் குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயிலுக்கு தான் வருகிறது. இங்கிருந்து கேரள மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.

Danymaddy

வயல்வெளிகள்

வயல்வெளிகள்

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நாகர்கோயில் பசுமையான வளமை நிறைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு.

PlaneMad

நாகர்கோயில் தென்னந்தோப்பு

நாகர்கோயில் தென்னந்தோப்பு

அழகிய தென்னந்தோப்புகள் நாகர்கோயில் புறநகரமெங்கும் காணப்படுகின்றன. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது நாகர்கோயிலில் தேங்காய் விலை குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Shareef Taliparamba

நாகர்கோயில் மணிக்கூண்டு

நாகர்கோயில் மணிக்கூண்டு


நாகர்கோயிலின் மத்தியில் இருக்கும் இந்த மணிக்கூண்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அம்சமாகும்.

Infocaster

 நாகராஜா கோயில்

நாகராஜா கோயில்

நாகர்கோயிலுக்கு இந்த கோயிலின் பெயரிலேயே இயற்பெயர் வந்தது என்கிறார்கள். நாகராஜாவின் கோயில் நாகர்கோயில் என்று அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

Ssriram mt

More News

Read more about: travel kanyakumari
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+