» »கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

Written By: Staff

தமிழகத்தில் மலை வாசஸ்தலங்கள் என்றதுமே ஊட்டி, கொடைக்கானல் & ஏற்காடு போன்ற இடங்கள் தான் நினைவுக்குவரும். நம்மில் பலரும் கொல்லி மலையை பற்றி சித்தர்கள் வாழும் இடம், இங்குள்ள மலையில் பல அரிய மூலிகைகள் இருக்கின்றன என்கிற ரீதியில் தான் கேள்வியுற்றிருப்போம். அதைத்தாண்டி கொல்லி மலை ஒரு நல்ல சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. கொல்லி மலையில் இருக்கும் சுற்றுலா அம்சங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

கொல்லி மலை - புராண வரலாறு: 

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

முன்பொரு காலத்தில் தவம் மேற்கொள்ள அமைதியான ஓரிடத்தை தேடி அலைந்த முனிவர்கள் கொல்லி மலையை தவம் மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முனிவர்கள் தவம் மேற்க்கொள்கையில் அரக்கர்கள் அதற்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தியிருக்கின்றனர். அரக்கர்களின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த முனிவர்கள் கொல்லிப்பாவையிடம் முறையிட்டிருக்கிறார்கள்.   

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

எட்டு கைகளுடன் தோன்றிய கொல்லிப்பாவை அரக்கர்களை வதைத்திருக்கிறாள். பின்னர் முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று கொல்லிப்பாவை இம்மலையிலேயே நிரந்தரமாக தங்கியிருக்கிறாள். இதனாலேயே கொல்லிப்பாவை வசிக்கும் மலையே கொல்லிமலை என்றாகியிருக்கிறது. 

அரப்பளீஸ்வரர் கோயில்:  

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

கொல்லி மலையில் இருக்கும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் அரப்பளீஸ்வரர் கோயிலாகும். இக்கோயில் தமிழ் வள்ளல்களில் ஒருவராக போற்றப்படும் வல்வில் ஓரி என்ற மன்னனால் கட்டப்பட்டதாகும். சிவபெருமான் இக்கோயிலின் மூலவராக காட்சிதருகிறார்.  

ஆகாய கங்கை அருவி:  

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

அரப்பளீஸ்வரர் கோயிலை ஒட்டியே அமைந்திருக்கிறது இந்த ஆகாய கங்கை அருவி. இந்த அருவியை அடைய கிட்டத்தட்ட ஆயிரம் படிகள் கீழிறங்க வேண்டும். கீழிருந்து பார்க்கையில் ஏதோ ஆகாயத்தில் இருந்து அருவி உற்றேடுப்பது போல தோன்றுவதாலேயே 'ஆகாய கங்கை' என இதற்கு பெயர் வந்துள்ளது. பல அரிய மூலிகைகள் கொண்ட கொல்லி மலையில் இருந்து வருவதால் இந்த அருவியில் குளித்தால் பல நோய்கள் நீங்கி மனதும், உடலும் புத்துணர்ச்சி பெரும். 

வல்வில் ஓரி திருவிழா: 

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு வல்வில் ஓரி திருவிழா கொல்லிமலையில் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது. நாய் கண்காட்சி, மலர் கண்காட்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா போன்றவை நடத்தப்படுகின்றன.  

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

மேலும் இங்கே சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கிருக்கும் நிச்சயம் பார்க்க வேண்டிய இரண்டு சுற்றுலா இடங்களாகும்.

எப்படி அடைவது?:   

கொல்லி மலைக்கு ஒரு சிற்றுலா !

சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல முக்கியமான ஊர்களில் இருந்தும் கொல்லிமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். கொல்லிமலையில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லிமலைக்கு கார் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  

சேலம் ரயில் நிலையம் கொல்லிமலையில் இருந்து 90கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. திருச்சி நிலையமும் ஏறத்தாழ இதே தொலைவில் உள்ளது. சேலம் மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் இருந்து தனியார் கார் மூலம் கொல்லிமலையை வந்தடையலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்