Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை, மதுரை, கோவையில் மாபெரும் பலூன் திருவிழா – அனுமதி இலவசம்!

சென்னை, மதுரை, கோவையில் மாபெரும் பலூன் திருவிழா – அனுமதி இலவசம்!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! பறக்கும் வண்ண வண்ண மாபெரும் பலூன்களை நீங்கள் கண்டு மகிழ தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது! சென்னையில் சமீபமாக பல சர்வதே அளவிலான ரேஸ் போட்டிகள், விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், அதை தொடர்ந்து இப்போது பறக்கும் பலூன் சாகசங்களும் விரைவில் நடைபெற உள்ளது. இது சென்னை மக்களுக்கு மட்டுமல்ல, மதுரை மற்றும் பொள்ளாச்சியிலும் உள்ள மக்களுக்கும் தான்! அங்கும் பலூன் திருவிழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது!

Balloon festival

தமிழகத்தை கலக்கி வரும் பல வண்ண திருவிழாக்கள்

தமிழகத்தில் சமீபக்காலமாக பலவிதமான திருவிழாக்கள் ஷோக்கல் நடைபெற்று வருகின்றன. மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கார் ஷோக்கள், புத்தக கண்காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வப்போது பல இடங்களில் Street festivals நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட ஏர் ஷோ நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடந்த இந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கோலாகலப்படுத்தினர்.

Balloon festival

சென்னை, மதுரை, திருச்சியில் பலூன் திருவிழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். வழக்கமாக ஜல்லிக்கட்டு நடத்தி மக்களை உற்சாகப்படுத்துவது காலம் காலமாக நடந்து வரும் விஷயம். சில இடங்களில் இது குறைந்துவிட்டாலும், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக இன்றளவும் பல இடங்களில் நடைபெற்றுதான் வருகிறது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சென்னை, மதுரை மற்றும் கோவையில் தற்போது பலூன் திருவிழா நடதப்படவுள்ளன.

பொள்ளாச்சி பலூன் திருவிழா செம ஹிட்

உலகம் முழுவதும் பல நாடுகளில் பறக்கும் பலூன் திருவிழா நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் நடத்தப்படும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அங்கீகாரம், கவனம் பெற்றன. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அவ்வாறாக நடந்த திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்ற நிலையில், விதவிதமான உருவங்களில் பறக்கும் பலூன்கள் ஆச்சர்யப்படுத்தியதுடன், மக்களும் அதில் ஏறி பயணம் செய்தனர்.

ஜனவரி 10 முதல் 19 ஆம் தேதி வரை

இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டில் பறக்கும் பலூன் திருவிழாவை மேலும் விரிவுப்படுத்தி 3 நகரங்களில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி, கோவை மற்றும் தலைநகர் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடக்கும் இந்த பலூன் திருவிழா ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியில் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு நாட்கள் பலூன் திருவிழா நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனதை கவரும் வண்ண வண்ண ராட்சத பலூன்கள்

இந்த பலூன்களை பறக்கவிட உலகம் முழுவதும் இருந்து விமானிகள் தமிழகத்தின் நகரங்களுக்கு வருகிறார்கள். இந்த 9 நாள் திருவிழாவின் போது, பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன்கள் பறக்கவிடப்படும், பலூன் திருவிழாவின் இந்த ஒன்பதாவது பதிப்பில், 15 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான ஹாட் ஏர் பலூன்கள், அனைத்து அழகான மற்றும் தனித்துவமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களைக் காணலாம்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் செல்லுங்கள்

திருவிழா மைதானத்தில் 100+ ஷாப்பிங் எக்ஸ்போ, ஈர்க்கும் கிட்ஸ் கேம்ஸ், பரபரப்பான பலூன் ரன் மராத்தான், டெதர்ட் பலூன் ரைடுகள் மற்றும் குழந்தைகளின் இதயங்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் ஷேப் பலூன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகள் நடைபெறும். ஹெலிகாப்டர் சவாரிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல தென்னிந்தியாவில் பொங்கல் விடுமுறைக்கு இந்த பலூன் திருவிழாவை சிறந்த குடும்ப திருவிழாவாக மாற்றுகிறது.

தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பலூன் திருவிழாவுக்கான நேரமும், இடமும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

More News

    Read more about: tamil nadu news chennai madurai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+