Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டின் தலைநகராக பரிசீலிக்கப்பட்ட சிக்கல்தராவில் என்னதான் உள்ளது ?

நாட்டின் தலைநகராக பரிசீலிக்கப்பட்ட சிக்கல்தராவில் என்னதான் உள்ளது ?

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது கொல்கத்தாவையே அவர்கள் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டனர். பின், 1911-ஆம் ஆண்டு ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னும் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், டில்லிக்கு பதிலாக வேறொரு நகரத்தை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என ஒரு பகுதி பரிசீலிக்கப்பட்டது. அது எந்தப் பகுதி என தெரியுமா ?

சிக்கல்தரா

சிக்கல்தரா

மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்கல்தரா நகரம். காட்டுயிர் சரணாலயத்திற்காக புகழ்பெற்றுள்ள இந்த சிக்கல்தரா பிரதேசம் கடல்மட்டத்திலிருந்து 1120 உயரத்தில் முக்கியமான காப்பி விளையும் பகுதியாகவும் அறியப்படுகிறது. சிக்கல்தரா 1823ம் ஆண்டு ஹைதராபாத் படைப்பிரிவைச் சேர்ந்த கேப்டன் ராபின்சன் என்பவரால் கண்டறியப்பட்டது. இங்கிலாந்தைப் போலவே காட்சியளித்த இந்த சிக்கல்தரா அவரை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

VinyS

தலைநகரம்

தலைநகரம்

இந்த சிக்கல்தராவை இந்தியத்தலைநகராக அறிவிக்கலாம் என்று அப்போதைய ஆங்கிலேய ஆட்சியின் போது ஒரு பரிசீலனை முன்வைக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களுக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் அந்த ஆலோசனை செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.

காட்டுயிர் வாழ்க்கை

காட்டுயிர் வாழ்க்கை

சிக்கல்தரா பகுதி காட்டுயிர்களின் சொந்த வீடு என்று அழக்கும் அளவிற்கு காட்டுயிர் அம்சங்களால் நிரம்பியுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பலவிதமான விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் இந்த பிரதேசத்தில் வசிக்கின்றன. சிக்கல்தரா தலத்தின் இயற்கை வனப்பை இங்குள்ள தேவி பாயிண்ட், ப்ராஸ்பெக்ட் பாயிண்ட் மற்றும் ஹரிக்கேன் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்களிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

Cj.samson

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

காட்சி முனைகள்

இங்குள்ள எழில் மிகுந்த இந்த மலைக்காட்சிதளம் சிக்கல்தரா பகுதியில் பீர் ஏரியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் சுற்றியுள்ள பகுதிகளின் இயற்கை எழிலை முழுவதுமாக கண்டு ரசிக்க முடியும். இதன் ஒரு புறம் காப்பி தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மறுபுறத்தில் ஐந்து மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் உருவாகியுள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

K R Ramesh

காவ்லிகர் கோட்டை

காவ்லிகர் கோட்டை

காவ்லிகர் கோட்டை சிக்கல்தராவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்த கோட்டையானது கவாலி எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது. பரா தர்வாசா எனப்படும் கோட்டை வாயில் பகுதி அற்புதமான வடிவமைப்புடன் கோட்டையில் நுழைவதற்கான பிரதான வாசலாக அமைந்துள்ளது.

C .SHELARE

கந்த்வா

கந்த்வா

கந்த்வாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் உள்ளன. நகரின் மையப்பகுதியில் கந்தாகர் எனும் மாபெரும் மணிக்கூண்டு உள்ளது. அதுமட்டுமின்றி கந்த்வாவில் தொன்மையான தீர்த்த குளங்களும் பல உள்ளன. தொன்மை வாய்ந்த கோவில்களையும், புண்ணியத் திருத்தளங்கள் பலவற்றையும் இந்த கந்த்வா கொண்டுள்ளது. மேலும், ஆசிகர் கோட்டை கந்த்வா நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Tom Thai

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more